தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நோய் விரட்டி நற்கதி அளிக்கும் நாயகன்

Go down

நோய் விரட்டி நற்கதி அளிக்கும் நாயகன்  Empty நோய் விரட்டி நற்கதி அளிக்கும் நாயகன்

Post  amma Fri Jan 11, 2013 1:06 pm

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - சென்னை, திருவான்மியூர்

ராமாயணம்
என்ற இதிகாசத்தை வடமொழியில் இயற்றியவர் வால்மீகி மகரிஷி. முக்காலமும்
அறிந்த இம்மகரிஷிக்கு ஆரம்பத்தில் கல்வி கேள்வி ஞானம் இல்லை. ‘ராம’ என்ற
சொல்கூட நாவால் சரியாகச் சொல்ல முடியாதவர். மகாகவி காளிதாசனைவிட ஒருபடி
குறைந்த ஞானம் கொண்ட இவருக்கு, மருந்தீசன் அருளால், ஞானம் உண்டாயிற்று.
அஞ்ஞானம் என்ற இருள் பிணி, மருந்தின் குணங்கொண்ட ஈசனால் நீங்கப் பெற்று
ஒரு பெரிய இதிகாசத்தையே எழுதினார் என்றால் ஈசனின் பெருமையை எப்படி
எடுத்துரைப்பது!

“உரைப்பதற்கோ சொல்லுமில்லை
எண்ணி வியக்கவோ எந்தை ஈசன்
தன் கருணைதமை ஆற்றலுமில்லையே’’
-என்றார் குதம்பை சித்தர்.
“நாகொண்டு ராம நாமமொழியான் தமை
ராம காவியமே யோத வைத்த
வித்தகனடி சேர்ந்துய்வீரே வால்மீகி
யொப்ப...’’


-என
போகரின் போற்றுதல், நமக்கு பக்தி வெள்ளக் களிப்பை ஊட்டுகின்றதன்றோ?
அகஸ்தியன் என்னும் சித்தர் தமக்கு மருத்துவ ஞானத்தை அள்ளித் தந்த
பேரருளாளன் இந்த மருந்தீசன். வால்மீகி மகரிஷி தொழுதேத்தியமையால்,
திருவால்மீகி ஊர் என்று வழங்கப்பட, பிற்காலத்து திரிந்து திருவான்மியூர் என
மருவிற்று. இந்த லிங்கம், தானே தோன்றியது. பாரத்வாஜ மகரிஷியின் இஷ்ட
தேவன், இங்கு குடிகொண்டுள்ள வான்மீக நாதர். மருத்துவராலும் தீராத எந்த
நோயையும் தீர்ப்பவன் இந்த மருந்தீசர். நோயும், பீடையாம் துன்பமும் மூன்று
விதமான கர்மாக்களால் மட்டுமே உண்டாகும் என்கிறார் புலிப்பாணி.

அவை:

1. ஆகாமியம்,
2.
சஞ்சிதம் என்ற வினை, 3. பிராரப்த்தம் என்ற தீய முன்வினை. இந்த மூன்று
கர்மாக்களையும் ஒரு சேர அழித்து நமக்கு மகிழ்ச்சியையும், முக்தியையும்
கொண்டு வந்து சேர்ப்பவனே இந்த மருந்தீசன்.

“பிறவிக்கு மருந்தாவான் பின்னும்
மாகாமிய சஞ்சித பிரார்த்தமெனு
வினை கெடுத்தாள்வான் - பிறவி
மருந்தீசனுமடி தொழுத மூர்த்தியுண்டு
வாரீர் வான்மீகி கண்ட
மருந்தீசனைத் தொழவே.’’


-என்று
கோரக்கர் கூறுவது இன்பம் பயக்குகிறது. மனிதப் பிறவியில் அன்றாடம் நாம்
அனுபவிக்கும் துக்கத்திற்கும், துயரத்திற்கும், சுகத்திற்கும்,
இன்பத்திற்கும் நமது முன்னைப் பிறவியில் தாம் செய்த புண்ணிய பாவங்களே
காரணம். அதன் பலனை இந்த மருந்தீசனை சென்று நெஞ்சாரத் தொழுது, பரிபூர்ண
சரணடைந்தால், பாவத்தின் பலனை மாற்றி, நன்மையும், இன்பமும் தருவான்.
இதனாலேயே, விதியை மதியால் வெல்லலாம் என்றனர் முன்னோர். ஆஞ்சநேயர் இன்றும்
அனுதி னம் அரூபமாய் வந்து பூஜித்து செல்லும் கோயில் இது. இந்த இடும்ப
மூர்த்தியை தொழுதமையால், வானர வடிவு கொண்ட ஆஞ்சநேயன், இறையை யொப்ப
போற்றப்படுவதுடன், அடுத்த யுகத்தில், பிரம்மன் பதவியையும் பெறுகிறான்
என்கின்றார் கொங்கணர்.

“அயனென நிற்பான் அனுமன்
அனுதினமு மிடும்ப மூர்த்தியாமருந்
தீசனை பூஜித்த பலனே
சிரஞ்சீவியாகி - மந்த தோஷங்
கழிப்பனிவ் வஞ்சனை மயிந்தன்
பெற்ற பேறு பெறுவார் யாரே.’’


வால்மீகி
ரிஷி, பாரத்வாஜ மகரிஷி, அகஸ்தியர் போன்ற பெருமக்களால் கொண்டாடப்படும் இந்த
மருந்தீசன், நமது தமிழக தலைநகரின் மிக அருகே எழுந்தருளி நம்மை ரட்சிக்கக்
காத்திருக்கிறார். அனுமன் பற்பல மேன்மைகளை பெற இந்த சுயம்பு மூர்த்தியை
தொழுதமையே காரணம் என்கின்றனர் கொங்கணர் உள்ளிட்ட சித்தர் பெருமக்கள்.
தீராப்பிணிகளை தீர்க்கும் சஞ்சீவியாய் நிற்கும் இந்த மருந்தீசர், வெள்ளை
வர்ணம் உடையவர். காமதே னுவின் பாலால் அனுதினம் அபிஷேகம் செய்வதினால், இந்த
நிறம் உண்டாயிற்று. வசிஷ்ட மகரிஷிக்கு இஷ்டமான காமதேனுவே தொழும் சிவன் என்
பது மிகவும் சிறப்பு. பிறவி நீக்குவார் இந்த ஈசன். சித்தர்களுக்குக்
காட்டிய தரிசனத்தை பக்தர்களுக்கும் காட்டுவார். யம பயத்தை போக்குவார்.
வாதம், ஜன்னி, நரம்பு ரோகங்களுக்கு இவர் பூஜை, சிறந்த நிவாரணி, நல்ல
மருந்து என்கின்றார் பாம்பாட்டி சித்தர்.

“நஞ்சுண்டான் நம் நஞ்சறுப்பான்
நெஞ்சில் கொண்டு சிரத்தை மிகக்
கொண்டேத்த சித்தர்தம்
தரிசனங் காட்டும் - அட்டி
யில்லாத் தனந் தேடித் தானே தரும்
விதிவழி வலுவிழக்கும். திருவால்மிகி
யூருரை மருந்தீசனை தொழக்கவே.’’


-வேடபுரி
ஈசனாம், ஔஷதீசனாம் என்றெல்லாம் கொண்டாடுகிறார், அன்னை பார்வதி
பிராட்டியார். அன்னைக்கு இங்கு திரிபுரசுந்தரி என்றும், சுந்தர நாயகி,
சொக்க நாயகி என்றும் பெயர் சொல்லி அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள் தொழுது
ஆர்ப்பரிக்கின்றனர்.

“அங்கயற்கண்ணியும் யன்னை
மூகாம்பிகையும் காமாட்சி
காந்திமதி பார்வதி என ஓரா
யிரத் தன்னையரும் கூடி
யேக உருவாய் நிற்க திரிபுர ஸுந்தரி
என போற்றுதுமே.’’


-என்கிறார்
கொங்கணர். பற்பல க்ஷேத்திரங்களில் குடிகொண்டுள்ள அன்னை பராசக்தியை எல்லாம்
ஒரே நேரத்தில் தொழுத பாக்கியம், பேறு கிட்டும். இந்த திரிபுர
சுந்தரேஸ்வரியை தொழுதால் என்பதாம். ஆஞ்சநயர், உலகில் உள்ள எல்லா புண்ணிய
தீர்த்தங்களையும் ஒரு கலயத்தில் சிறுகச் சிறுக எடுத்த அதைக் கொண்டு
மருந்தீசனை மகா சிவராத்திரி ராக்காலம் அபிஷேகித்து தொழுது நிற்கின்றார்.

“விரையார் கொன்றை சூடி
நந் நஞ்சுண்டு சொக்கியை
யடக்கி தென் நீர் திருவான்
மியூர் உறைவானை அனுமன்
பிரம்ம தீர்த்தத்து மகாசிவராவில்
அபிடேகிக்க வானோரும்
வணங்கக் கண்டோமே.’’
என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.


இந்த இறைவனை நாமும் தொழுது பிறவிப்பயனை அடைவோமே.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum