துர்க்கை அன்னையை வீட்டில் வழிபடும் முறை
Page 1 of 1
துர்க்கை அன்னையை வீட்டில் வழிபடும் முறை
துர்க்கை அன்னையை வீட்டிலேயே தீப பூஜை செய்ய விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் முறையில் அனுசரித்து வழிபட வேண்டும். பூஜை செய்யும் அறையை முதலில் சுத்தமாக கழுவிவிட்டு, அங்கே சக்தி மாகோலமிட வேண்டும். அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும்.
வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதன் நடுவில் ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும். மஞ்சள் நிறமுடைய பத்து எலுமிச்சம் பழங்களை வாங்கி, பழங்களை இரண்டு துண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
அந்த இருபது துண்டுகளில் இரண்டு துண்டுகளை மட்டும் எடுத்து சாறுபிழிந்து விட்டு- பிழிந்த முடிகளை உள்பக்கம் வெளிப்பக்கம் வருமாறு திருப்பி குழிவான கின்னம் போல் செய்து கொள்ள வேண்டும். அந்த எலுமிச்சம் பழக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட துர்க்கா தேவியின் படத்தின் முன்போ, அல்லது சிலையின் முன்போ வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
துர்க்காதேவிக்கு நிவேதனைப் பொருளாக தயிர் சாதம், உளுத்துவடை, அவல், பாயாசம், எலுமிச்சம் பழச்சாதம் ஆகியவற்றை படைத்து பூஜை செய்ய வேண்டும். இரண்டு துண்டாக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தின் சாற்றைப் பிழிந்து அதில் வெல்ல சர்க்கரை கலந்து பானமாக்கி நிவேதனம் செய்ய வேண்டும்.
பின்னர் துர்க்கா தேவியின் பாமாலைகள், துதிப்பாடல்கள், ராகு காலத்தில் பாடவேண்டிய பாடல்கள் ஆகியவற்றைப் மனம் உருகிப்பாட வேண்டும். பூஜையின் முடிவில் பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பானகத்தைக் கொடுத்து தாங்களும் பருகலாம். துர்க்காதேவியின் பூஜையை வீட்டிலேயே செய்வதால் குடும்பம் என்றென்றும் செல்வச் செழிப்புடன் இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» துர்க்கை அன்னையை வீட்டில் வழிபடும் முறை
» அன்னையை வழிபடும் முறைகள்
» அன்னையை வழிபடும் முறைகள்
» நந்தியை வழிபடும் முறை
» துர்க்கை ஸ்லோகம்
» அன்னையை வழிபடும் முறைகள்
» அன்னையை வழிபடும் முறைகள்
» நந்தியை வழிபடும் முறை
» துர்க்கை ஸ்லோகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum