தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் மகனுக்கு நடிக்கவே விருப்பம் : விக்ரம்

Go down

என் மகனுக்கு நடிக்கவே விருப்பம் : விக்ரம் Empty என் மகனுக்கு நடிக்கவே விருப்பம் : விக்ரம்

Post  ishwarya Mon Mar 25, 2013 2:40 pm



தாண்டவம் படத்துக்கான படப்பிடிப்புக்காக பயணமாகிக் கொண்டிருந்த விக்ரம், நம்மைப் பார்த்ததும் ஒரு புன்னகையுடன் வேலை இல்லாமல் வர மாட்டீர்களே என்று கேட்டார்.

நாமும் அவரைப் போலவே அழகாக சிரித்தபடி, ஆமாம், தாண்டவம் படம் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டோம்.

நான் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற தெய்வ திருமகள் திரைப்படத்தின் மொத்த நடிகர் நடிகைகள் பட்டாளமும் தாண்டவம் படத்தில் இணைந்து நடிக்கிறோம். அமலா பாலைத் தவிர, எனவே மொத்த யூனிட்டும் ஒரு குடும்பம் போல இருக்கிறது படப்பிடிப்பின்போது என்றார்.

பல சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் சினிமாவுக்குள் நுழைந்துவிட்டனர். உங்கள் மகனைப் பற்றி இதுவரை எந்த தகவலும் வரவில்லையே என்று கேட்டதற்கு, எனது மகன் துருவ்வனுக்கும் நடிக்கவே ஆர்வம் உள்ளது. அவனைப் பார்க்கும் பலரும், அவன் உங்களைப் போலவே இருப்பதாகக் கூறுகிறார்கள்.

நேரம் தான் பதில் சொல்ல வேண்டும். எதுவாக இருந்தாலும் அவனது விருப்பம் போல செயல்பட அனுமதிப்பேன் என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum