தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

7-ல் நடிகர் சங்க பொதுக்குழு: கமல், ரஜினிக்கு அழைப்பு

Go down

7-ல் நடிகர் சங்க பொதுக்குழு: கமல், ரஜினிக்கு அழைப்பு Empty 7-ல் நடிகர் சங்க பொதுக்குழு: கமல், ரஜினிக்கு அழைப்பு

Post  ishwarya Mon Mar 25, 2013 2:35 pm



சென்னை, ஜூலை 3: நடிகர் சங்கப் பொதுக்குழுவில் பங்கேற்க நடிகர்கள் கமல், ரஜினி உள்பட 3 ஆயிரம் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற நடிகர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் நடிகர் சரத்குமார் போட்டியின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் பொதுச்செயலாளராக ராதாரவி, துணைத் தலைவர்களாக விஜயகுமார், கே.என்.காளை, பொருளாளராக வாகை சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக, நடிகர் சங்கத்தின் பொதுக்குழு வரும் 7-ம் தேதி கூடுகிறது. தியாகராய நகரில் உள்ள ஜெர்மன் ஹாலில் நடைபெறும் இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்குமாறு நடிகர்கள் கமல் ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, விஜய், அஜித், விக்ரம் உள்பட நடிகைகள், நாடக நடிகர்கள் என 3 ஆயிரம் உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் குழுவுக்கு ஒப்புதல், வரவு-செலவு தாக்கல், நடிகர் சங்கத்துக்குப் புதிய கட்டடம் கட்டுதல், நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்க கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் உள்ளிட்ட பல விஷயங்கள் கலந்தாலோசிக்கப்படுகின்றன.

இதுவரை உறுப்பினராகப் பதிவு செய்யாத புதிய நடிகர், நடிகையர் விரைவில் உறுப்பினராகப் பதிவு செய்ய கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நாளை தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்… பரபரப்பில் திரையுலகம்!
» தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்ட தடை விதிக்க வேண்டும் – கமிஷனரிடம் பாபுகணேஷ் புகார்
» ரஜினிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு!
» அமெரிக்க அரசு சிறப்பு விருந்தினராக வருமாறு ரஜினிக்கு அழைப்பு!
» நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம்-ஒரு முன்னணி நடிகர், நடிகையும் வரவில்லை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum