தேவர் சிலை சேதம்:
Page 1 of 1
தேவர் சிலை சேதம்:
தேவர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தையொட்டி கோவில்பட்டி நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பஸ்கள் வழக்கம் போல் ஓடின. கடைகள் திறந்து இருந்தன.
தேவர் சிலை சேதம்
கோவில்பட்டி யூனியன் 5வது வார்டு சங்கரலிங்கபுரம் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பி வலையும், தேவர் சிலையும் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. இது பற்றிய தகவல் அறிந்ததும் தேவர் சமுதாயத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் திரண்டு மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியல் வாபஸ்
ஆங்காங்கே வாகனங்கள் மீது கல் வீசப்பட்டதால் கோவில்பட்டி நகரில் பஸ்கள் ஓடவில்லை. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போலீசாரும், அரசு அதிகாரிகளும் விரைந்து வந்து, போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
போலீஸ் குவிப்பு
தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார்சிங், நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், தூத்துக்குடி மாவட்ட சூப்பிரண்டு ராஜேந்திரன், நெல்லை மாவட்ட சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி ஆகியோர் கோவில்பட்டியில் முகாமிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர். கோவில்பட்டி, சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம் கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக 11 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களில் சிலர் மாணவர்கள் என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்
சிலை அவமதிப்பு சம்பவத்துக்கும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, இன்னொரு தரப்பினர் கோவில்பட்டிஎட்டயபுரம் ரோடு சந்திப்பில் உள்ள அம்பேத்கார் சிலை முன்பு திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். உடனடியாக கோவில்பட்டி உதவி கலெக்டர் கதிரேசன், தாசில்தார் ரமேஷ் ஆகியோர் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். நேற்று சங்கரலிங்கபுரம் கிராமத்தில் வாகனங்கள் மீது மீண்டும் கல் வீசப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 2 தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. அப்போது சிலர் கல் வீசியதில் பெண் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
144 தடை உத்தரவு
கோவில்பட்டி நகரில் பதற்றத்தை தணிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக உதவி கலெக்டர் கதிரேசன் நேற்று அறிவித்தார். கோவில் விழாக்கள், திருமண ஊர்வலம், இறுதி ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளை இந்த 144 தடை உத்தரவு கட்டுப்படுத்தாது என்றும், மற்றபடி பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூடக் கூடாது என்றும் உதவி கலெக்டர் உத்தரவில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து நேற்று பஜாரில் கடைகள் திறக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடத் தொடங்கின.
மீண்டும் கல்வீச்சு
நேற்று மாலையில் மீண்டும் கோவில்பட்டியில் சில பஸ்கள் மீது கல் வீசப்பட்டன. அதைத்தொடர்ந்து கோவில்பட்டியில் இருந்து கிராமங்களுக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் மட்டும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தேவர் சிலை சேதம்: கோவில்பட்டியில்
» அழகுச் சிலை கரீனாவுக்கு லண்டனில் மெழுகுச் சிலை
» தேவர் தேவர் தேவர்
» ராம தேவர் சித்தர்
» தேவர் ஸ்தோத்திரங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum