எவை உண்மையான உலகத் திரைப்படங்கள்? திரைப்பட இயக்குநர்கள் பேச்சு
Page 1 of 1

உள்ளூரை சரியாகப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் தான் உண்மையான உலகத் திரைப்படங்கள் என்று, திரைப்பட இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், சீனு ராமசாமி, பாண்டிராஜ் ஆகியோர் கூறினர்.
÷ஈரோடு புத்தகத் திருவிழாவில் மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கிய பாராட்டுப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்ட மூவரும் மக்களின் கேள்விகளுக்கு மேடையில் அளித்த பதில்கள்:
சீனு ராமசாமி:
எனது திரைப்படம் 3 தேசிய விருதைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைவிட இவ்வளவு பெரிய கூட்டத்தில் விருது பெறும்போது அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இன்று திரைப்படங்களில் ஒவ்வொரு உறுப்பும் வியாபாரமாகிவிட்டது.
மிகப் பெரிய நடிகர்கள் என்று பெயர் பெற்றவர்கள் தரமான இலக்கியங்களை வாசிக்கும் போது தான், இலக்கியம் திரைப்படமாக மாறும்.
உள்ளூரில் நேர்த்தியாக எடுக்கப்படும் அனைத்து திரைப்படங்களும் உலகத் திரைப்படங்கள் தான் என்றார்.
பாண்டிராஜ்:
பெண்ணின் அங்கங்களைக் காட்டி வியாபாரப் பொருளாக எடுக்கும் திரைப்படங்களை ஒருபோதும் நான் எடுக்க மாட்டேன். எனது தாய், தந்தை, சகோதரிகளுடன் திரையரங்கில் உட்கார்ந்து பார்க்கக் கூடிய அளவுக்கு தரமான படங்களை மட்டுமே எடுப்பேன். அடுத்து நகைச்சுவைப் படம் ஒன்றை எடுக்க விரும்புகிறேன்.
÷நான் பிளஸ் 2 வரைதான் படித்திருக்கிறேன். "பசங்க' படம் எடுக்கப்பட்ட கிராமம் தான் எனது சொந்த ஊர். எந்த வசதியும் இல்லாத கிராமம். எனது பெற்றோருக்கு எழுதக் கூடத் தெரியாது. ஆனால், எனது தன்னம்பிக்கை தான் என்னை உயர்த்தியது. புத்தகங்களைப் படித்துத் தான் எனது மனதைப் பக்குவப்படுத்தினேன் என்றார்.
பாலாஜி சக்திவேல்:
சமூகத்தில் இருக்கும் அவலங்களை தொடர்ந்து படமாக மாற்றுவேன். உண்மையான படங்களை மக்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும். பத்திரிகை, ஊடகங்களை படிக்கும்போது அதில் கிடைக்கும் உண்மைச் சம்பவங்களை கருவாகக் கொண்டு திரைப்படத்தை உருவாக்கி வருகிறேன் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திரைப்பட இயக்குநர்கள் 19-ல் உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு: டிசம்பர் 30-ல் திரைப்பட இயக்குநர்கள் உண்ணாவிரதம்
» நார்வே தமிழ் திரைப்பட விழா 2012… இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆர்வம்!
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள் உண்ணாவிரதம்
» ரஜினி நலம்பெற 500 இயக்குநர்கள், 1000 உதவி இயக்குநர்கள் கூட்டுப் பிரார்த்தனை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum