நடிகை சுபா பட்டேலா மஞ்சள் காமாலையால் மரணம்
Page 1 of 1
நடிகை சுபா பட்டேலா மஞ்சள் காமாலையால் மரணம்
தமிழில் இந்த ஆண்டு வெளியான மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தில் அறிமுகமான நடிகை சுபா பட்டேலா மஞ்சள் காமாலையால் உயிரிழந்தார்.
மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்னையால் சிகிச்சை பெற்று வந்த சுபா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 21.
கல்லீரல் பிரச்னைக்கு கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த சுபாவுக்கு, சமீபத்தில் மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது. சிகிச்சை காரணமாக அவர் குணம் அடைந்து வந்துள்ளார். ஆனால் திடீரென கடந்த வாரம் கோமா நிலைக்குச் சென்ற சுபா, நினைவு திரும்பாமலேயே திங்களன்று மரணமடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுபாவுக்கு பெற்றோரும், ஒரு மூத்த சகோதரியும், இளைய சகோதரனும் உள்ளனர்.
தமிழில் மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தில் அறிமுகமான இவருக்கு தெலுங்கில் பல வாய்ப்புகள் வந்தும், உடல் நிலைக் காரணமாக அவற்றை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை சுபா திடீர் மரணம்
» பழம்பெரும் நடிகை காந்திமதி மரணம்
» பழம்பெரும் நடிகை எம்.பானுமதி மரணம்
» பழம்பெரும் நடிகை சரோஜா மரணம்!
» பிரபல நடிகை சுஜாதா மரணம்
» பழம்பெரும் நடிகை காந்திமதி மரணம்
» பழம்பெரும் நடிகை எம்.பானுமதி மரணம்
» பழம்பெரும் நடிகை சரோஜா மரணம்!
» பிரபல நடிகை சுஜாதா மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum