தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பசங்க பட கூட்டணியில் புதிய படம்

Go down

பசங்க பட கூட்டணியில் புதிய படம் Empty பசங்க பட கூட்டணியில் புதிய படம்

Post  ishwarya Mon Mar 25, 2013 11:45 am



கேமராமேனாக இருந்து இயக்குநர் அவதாரம் எடுத்தவர்களான கே.வி. ஆனந்த், ரவி கே சந்திரன் பட்டியலில் தற்போது இணைய உள்ளவர் எஸ்.டி. விஜய் மில்டன்.

காதல், வழக்கு எண் 18/9 ஆகிய படங்களின் கேமராமேனாக பணியாற்றிய விஜய் மில்டன், தனது புதிய படத்தை நவம்பரில் துவக்க திட்டமிட்டுள்ளார்.

இயக்கம் மட்டுமல்லாமல், கேமரா மற்றும் தயாரிப்புகளையும் விஜய் மில்டனே கவனிக்க உள்ளார். இந்த படத்தில் பாண்டிராஜின் இயக்கத்தில் உருவான பசங்க படத்தில் நடித்த கிஷோர், ஜீவா, பகடா பாண்டி, குட்டிமணி ஆகிய நான்கு பேரும் நடிக்க உள்ளார்.

இந்த படம் குறித்து பேசிய விஜய் மில்டன், ஒரு ஆக்சன் படத்தை இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இந்த படத்தில் இளமைப் பருவத்துக்குள் நுழையும் பசங்களின் கதையை அடிப்படையாக வைத்து ஆக்சன் கலந்த கதையை இயக்க உள்ளேன்.

இதற்காக பாண்டிராஜ் சாரை சந்தித்து, கதையை அவரிடம் கூறி, அவரது அறிவுரையை அடிப்படையாக வைத்து சில மாற்றத்தையும் செய்துள்ளேன். இது மட்டுமல்ல, இப்படத்துக்கு பாண்டிராஜ் சார் தான் வசனம் எழுதுகிறார் என்று கூறினார்.

இப்படம் கோயம்பேடு சந்தைப் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாகவும், இப்படத்துக்கு பசங்க பாகம் 2 என பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் பல விஷயங்கள் முடிவு செய்யப்படாமல் உள்ளதால், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum