தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆபாச பட வழக்கு: நடிகை ஷகிலா விடுதலை

Go down

ஆபாச பட வழக்கு:  நடிகை ஷகிலா விடுதலை Empty ஆபாச பட வழக்கு: நடிகை ஷகிலா விடுதலை

Post  ishwarya Mon Mar 25, 2013 11:37 am

ஆபாச பட வழக்கில் நடிகை ஷகிலா உள்ளிட்ட 9 பேரை விடுதலை செய்து, திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
பாளை. பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் திரைப்பட தணிக்கை குழுவினர் மற்றும் போலீஸôர் கடந்த 26.8.2003 அன்று திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த திரையரங்கில் திரையிடப்பட்டிருந்த நடிகை ஷகிலா நடித்த திரைப்படத்தில் கூடுதல் சுருள் இணைக்கப்பட்டு ஆபாச காட்சிகள் காட்டப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக திரைப்பட தணிக்கைக் குழு புகாரின்பேரில், திரையரங்க குத்தகைதாரர் வசீகரன் (35), ஆபரேட்டர் பரமசிவன் (40), விநியோஸ்தகர்கள் சிவசுப்பிரமணியன் (40), சுப்பிரமணியன் (55), திரையரங்க ஊழியர்கள் முருகன் (48), மாரிமுத்து (48), தாமஸ் (49), அந்தப் படத்தில் நடித்த நடிகை ஷகிலா (27), நடிகர் தினேஷ் (40) ஆகிய 9 பேர் மீதும் போலீஸôர் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி முதலாவது நீதித்துறை நடுவர்மன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நீதித்துறை நடுவர் ராமலிங்கம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து நீதித் துறை நடுவர் உத்தரவிட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum