தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரிசுத்த தந்தை தாயின் வரலாறு

Go down

 பரிசுத்த தந்தை தாயின் வரலாறு Empty பரிசுத்த தந்தை தாயின் வரலாறு

Post  oviya Sun Mar 24, 2013 7:29 pm


கடவுளானவர் மனித அறிவுக்கெட்டாத தமது இலட்சணங்களை வெளிப்படுத்துவதற்கு நித்திய காலத்திலேயே சித்தமாயிருந்தார்.அதற்கென முடிவில்லா வார்த்தையானது மனுவுடலில் ஒன்றிக்கும் படி சகல படைப்புக்களையும் உருவாக்குவதற்கு முன்பே,இவருக்கு தயாராக வேண்டிய பெண்ணுக்கு அவசியமான வரங்களைக் கொடுத்தார். முதலாவது இவ்விருவருக்காகவும்,இரண்டாவது பணிவிடைக்காரராகிய மனிதருக்காகவும், வானத்தையும் பூமியையும் கிரகங்களையும் மற்றும் ஐம் பூதங்களையும் உண்டாக்கினார்.
இறைவனுடைய மகத்துவத்துக்கு முன்னிற்கவும், இவர்களுக்கு பணிவிடை செய்யவும், சம்மனசுகளை உண்டாக்கினார்.அவர் உண்டாக்கப்போகும் மனிதன் கெடுவதைத் தமது தூரதிருஷ்டியாற் கண்டார். அப்போது நன்மை தீமை அறிந்து பேரொளியில்உயர்ந்த சம்மனசுக்கள் மனோ சுதந்திரம் உள்ளவர்களாய் இருந்தார்கள். இறைவன் சரீரத்தில் ஒன்றிக்கப் போவதையும் அவருக்குத் தாயாராக வர வேண்டியவளும் மனுக்குலத்தின் மாசு நீங்கி மகா வரப்பிரசாதங்களை கொண்டவளுமான ஒரு பெண்ணை தங்களுக்கு இராக்கினியாய் அங்கீகரித்து இறை மனிதனை வணங்க வேண்டும் என்ற இறை அறிவிப்பையும் லூசிபரோடு வேறு அநேகரும் எதிர்த்து இறைவன் சொல்வது அநியாயம் என்றார்கள்.
அதனால் இறைவன் அவர்களைப் பாதளத்தில் தள்ளிவிட்டார். ஆதாம் ஏவாள் படைக்கப்பட்ட பின் பாவத்தில் வீழ அவர்கள் சந்ததியில் தோன்றிய இரண்டு வெளிச்சங்களே புனித சுவக்கீனும், புனித அன்னம்மாளும்.அக்காலத்தில் கபிரியேல் என்னும் சம்மனசானவர் புனித அன்ன்ம்மாளுக்குக் காட்சியளித்து “நீ சுவக்கீனை மெய் விவாகம் செய்து கொள்ளவேண்டும் என்பது இறைச்சித்தம்” என்றார். அவ்வாறே சுவக்கீனுக்கும் தோன்றி “நீ அன்னம்மாளை மெய்விவாகம் செய்ய வேண்டும் என்பது இறை கட்டளை” என்றார். அவ்வாறே சுவக்கீனும் அன்னம்மாளும் திருமணம் புரிந்து இருபது வருடங்கள் பிள்ளைப் பாக்கியமின்றி இருந்தனர். அக்காலத்தில் பிள்ளையில்லாதிருப்பது அவமானமாக் கருதப்பட்டது.
இறைச்சித்தம் நிறைவேறும் காலம் வந்த போது அன்னமாளின் மலடு அற்புதமாய் நீங்கியது. சுவக்கீனுக்கு அறுபத்தாறு வயதும் அன்னமாளுக்கு நாற்பத்து நான்கு வயது நடக்கும் போது மூவொரு இறைவன் திருவுளம் பற்றியதாவது: “நமது மகிழ்ச்சிக்கானகருமத்தைத் தொடங்க காலம் வந்து விட்டது. எல்லோரையும் விட நமக்குப் பிரியமான அந்த புதிய படைப்பை நாம் உண்டாக்க வேண்டும். அவள் மனித சுபாவத்தை விட்டு நீங்கவும் நரக சர்ப்பம் அவள் மேல் பிடிகொள்ளாதிருக்கவும் வேண்டும். ஒருபோதும் பாவத்தால் மாசுபடாத பொருளால் அவள் செய்யப்பட வேண்டும். நமது திருச்சித்ததிற்கு இடையூறு செய்வோர் இல்லாமையால் அவளை மகா புண்ணியவதியும், மகா பாக்கியவதியுமாய் படைக்க வேண்டும். மனிதர்களுக்கு நன்மாதிரிகையாக இறை மனிதன் அவளுக்குக் கீழ்படிந்திருப்பார். அவள் அதிசயமான இரட்சிப்புக் கொண்டு களங்கமற்ற ஞான சவுந்தரியாவாள். இறைமகன் தனது மாதாவுக்கும் நித்திய பிதாவுக்கும் உள்ள நெருங்கிய சாயலைக் கண்டு அகமகிழ்வார்.”
இறைவன் சம்மனசுகளுக்கு இதைச் சொன்ன போது அவர்கள் இதை அங்கீகரித்துக் கொண்டு சாஷ்டாங்கமாக விழுந்து அவரை வணங்கினார்கள். வானத்தையும் பூமியையும் படைக்க இறைவனுக்கு இருந்த கவனத்தை விட இந்தத் தேவலோக இராக்கினியைப் புனித அன்னம்மாளின் வயிற்றில் அமைக்க அவர் அதிகம் கவனம் கொண்டிருந்தார்.

oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum