எங்கே குழந்தை?
Page 1 of 1
எங்கே குழந்தை?
அது பகவான் ரமணரின் குழந்தைப் பருவம். சொல்லவே வேண்டாம் குழந்தைப் பருவம் என்றாலே குதூகலந்தான். ஒரு இடத்தில் நிற்காது அங்கு ஓடும், இங்கு ஓடும், ஆடும், பாடும், கைதட்டி தாளம் போடும், சிணுங்கும், சிரிக்கும், இமை மூடாமல் மெய்மறந்து ரசிக்கும் என குழந்தைப் பருவ சேட்டைகளை சொல்லி மாளாது. அப்படிப்பட்ட அற்புதமான பருவத்தில் பகவான் ரமணருக்கு ஏற்பட்ட அனுபவம் பக்தர்களை பரவசத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடும். நன்கு காற்றுவீசிக் கொண்டிருந்த நாளில் குழந்தை ரமணன் தன் முயற்சியால் காற்றாடி (பட்டம்) செய்து பறக்கவிட்டு குதூகலமாக ரசித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென மேகங்கள் திரண்டன, சுழல் காற்றை மழையாக்கின. பட்டம் பொலபொலவென நனைந்து கீழே விழுந்து, குழந்தையின் குதூகலத்தை சூறையாடியது. காற்றாடி செய்து பறக்கவிட்டு விளையாடிய குழந்தை ரமணன் சுறுசுறுப்பாகி காகிதத்தில் கப்பல் செய்து ஓடும் தண்ணீரில் மிதக்கவிட்டு விளையாடியது. என்ன ஆச்சர்யம் இந்த குழந்தைப் பருவத்தில் கோலியானாலும், குஸ்தியானாலும், பம்பரமானாலும், நீச்சலானாலும் ரமணனுக்கு நிகர் ரமணன் தான். ஆம், அவன் தெய்வக் குழந்தையல்லவா!
இவைகளுடன் நிற்காமல் ரமணனின் அற்புதங்கள் தொடர்ந்தது. ஒருமுறை தனது சித்தப்பா வீட்டிற்கு சென்றிருந்த பொழுது, சித்தி குழந்தையின் சித்திகளை புரிந்துகொண்டாள். அந்த காலகட்டங்களில் வீடுகளில் தான் அப்பளம் இடுவார்கள் (தயாரிப்பார்கள்). அப்பளம் தயாரிப்பது அவ்வளவு எளிதான பணியல்ல. அப்படியிருக்கையில், ஒருநாள் சித்தி அப்பளம் இட்டுக்கொண்டிருக்கையில் குழந்தை ரமணனை கூப்பிட்டு மாவில் கைவைக்கச் சொல்ல, என்ன அதிசயம்! மாவுகள் உருண்டைகளானதோடு மட்டுமல்லாமல், அச்சு அசலாக வட்ட வடிவமாகின. பின்னே, அருணையில் இருந்தபோது தனது தாய்க்கும், அன்பாய் வளர்த்த பசு லக்ஷ்மிக்கும், இதயத்தையும் சிரசையும் ஆரத்தொட்டு பிரம்ம நிர்வாணத்தில் கொண்டு சேர்த்த கையல்லவா. ஒருமுறை, காவ்யகண்ட கணபதி முனி குண்டலினி சாதனாவால் அவரது கபாலம் பிளவுண்டு எழுந்த ஜுவாலையால் கொதித்தபோது, உடனே பகவான் ரமணர் சிரஸில் கைவைத்து அழுத்தியதால், சிரசு குளிர்ந்தது.
குழந்தைப் பருவத்தில் காற்றாடி, கப்பல் என செய்து விளையாடிய ரமணனை, உறவினர் ஒருவர் திட்டிவிட்டார். ஆம், அந்தக்காலத்தில் ரமணரின் தந்தை வழக்கறிஞர். ஆகவே, தஸ்தாவேஜுகள் வீட்டில் மலைபோல் குவிந்திருக்கும். அதிலிருந்து குழந்தை ரமணன், கப்பல் விடத் தேவையான காகிதத்தை எடுத்தது தவறு என்று அந்த பெரியவர் திட்டிவிட்டார். திட்டு விழுந்தால் பெரியவர்கள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்வார்கள். ஆனால், குழந்தை முகம் வாடியது. மழையின் வேகமும் தணிய, திட்டிய பெரியவரின் கோபமும் தணிந்தது. ஐயோ திட்டிவிட்டோமே என்று மனம் பதைத்து குழந்தை தானே என்று மருகி வாசலைப் பார்த்து குரல் கொடுத்தார். எதிர் சத்தம் இல்லை. உடனே ஓடோடி வாசலுக்கு வர, அங்கு குழந்தை இல்லை. உடனே வீடு முழுக்க கவலை சூழ்ந்தது. குழந்தையல்லவா அம்மாவிடம் சென்றிருப்பான் என ஒருத்தரை ஒருத்தர் சமாதானப்படுத்திக் கொண்டு வீடு முழுக்க தேடிப்பார்த்து இல்லையே தெரிந்தவுடன், பதட்டத்துடன் வீதிக்கு வந்தது. விஷயத்தை கேள்விப்பட்ட உறவினர்கள், சுற்றத்தார்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.
திருச்சுழி கிராமத்தில் இருக்கும் ஈஸ்வரன் கோவிலில் அமைதி சொரூபமாக வீற்றிருக்கும் அன்னை சகாயவல்லி. தமிழில் துணைமாலை அம்மன் என்றழைப்பர். அந்த கிராமத்தில் எந்தவொரு காரியத்தை செய்வதென்றாலும் துணைமாலை அம்மனையே துணை கொள்வார்கள். ஆக, குழந்தையைக் காணவில்லை என்று கலவரப்பட்ட அனைத்து மனமும் அம்பாளை வேண்டி உருகி, மனதில் பூஜித்தது. அம்பாளுக்கு சேவகம் புரியும் பட்டர் வீட்டிலும் ரமணன் செல்லக் குழந்தையாக ஓடியாடியதால், அந்த வீட்டிலும் கவலை நிழல் படர்ந்தது. இவர்கள் வெளியில் தேடிக்கொண்டிருக்க, இறைவன் தனது திருவிளையாடலை நடத்திக் கொண்டிருந்தான். ஆம், அன்று அம்பாள் சன்னதி பிரகாசமாகவும் அமைதியாகவும் இருந்தது. அன்னை முகத்தின் தேஜசும், உதட்டின் புன்சிரிப்பும் நாடகத்தை ரசிப்பதாக இருந்தது. பட்டரும் அன்று ஒருவித சோகத்தில் ஏதோ ஞாபகத்தில் விளக்குத் திரியை லேசாக தூண்டிவிட, அந்த வெளிச்சத்தில் அம்பாளின் விக்ரஹத்திற்குபின் நிழலாட, பட்டர் மெதுவாக அருகில் சென்று பார்க்கையில், புதையலைத் தேடிக் கிடைத்தாற்போல் துள்ளி மகிழ்ந்தார். ஆம், குழந்தை ரமணன் ஆடாமல், அசையாமல் அங்கே அமர்ந்திருந்தது. திட்டியதால் மனம் வாடி வேறெங்கும் செல்லாமல், அன்னையிடமும் செல்லாமல் நேராக அம்பாளின் காலடியில் சரணடைந்தது. ஒருவகையில் அறியா குழந்தைப் பருவத்தில் தன்னந்தனியாக இப்படி அம்பாளை நோக்கி வருவது ஆச்சர்யந்தான். தேவியைக் கண்டு தனது பாரத்தை இறக்கி அப்படியே சன்னதியில் தெளிவாக தனியாக அமர்ந்துவிட்டான் யாரும் சொல்லித்தராமல். உடனே பட்டர் குழந்தையை ஆரத்தழுவி தூக்கிக் கொண்டு, ஓடோடி வீட்டிற்கு வந்து நடந்த சம்பவங்களை மூச்சு விடாமல் விலாவாரியாக விவரித்தார்.
ஆறே வயதான குழந்தையின் மனம் அன்னையிடம் லயித்த மேன்மையான பக்தியை மெச்ச முடியாது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே…! – பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» பாதை எங்கே... பயணம் எங்கே
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» நான் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன். எனக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்து, ஒன்று 15 நாட்களிலும், 2வது குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போதும், 3வது குழந்தை விஷக்காய்ச்சலாலும் இறந்து விட்டது. நான் என்ன பாவம் செய்தேன்? நல்வாழ்வு வாழ பரிகாரங்கள் கூறுங்
» எங்கே போகிறோம்?:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum