ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில்
Page 1 of 1
ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில்
ஸ்தலவரலாறு.....
சென்னைக்குத் தெற்கே 60 கி.மீ. தொலைவில் மகாபலிபுரத்தில் இந்த திவ்ய தேசம் அமைத்துள்ளது. இது மாமல்லாபுரம், கடல்மல்லை, தல சயனம், அர்த்த சேது என்னும் பெயர் கொண்டு விளங்குகிறது. இது திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதி. புண்டரீக முனிவர் தாமரை மலர்களைக் கொண்டு பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனை வழிபட வேண்டும் என்று எண்ணியவராய்க் கூடை நிறையப் பூக்களைப் பறித்துக் கொண்டு வந்தார்.
அவர் செல்லும் போது கடலானது வழியடைத்துக் கொண்டு இருப்பதைக் கண்ட முனிவர் பத்தி மேலீட்டால் கடல் நீரைக் கைகளால் இறைத்து விடலாம் என்று எண்ணி அவ்வாறே செய்யலானார். முனிவரின் பக்தியை மெச்சிய பெருமாள், முதியவர் வேடம் கொண்டு தனக்கு ஆகாரம் கொடுக்குமாறு கேட்டார்.
முனிவர் ஆகாரம் கொண்டு வரச் சென்றதும் இறைவன் திருவனந்தான் மேல்சயனம் கொண்டுள்ள கோலத்தில் கூடையில் இருந்த தாமரை மலர்களைச் சாத்திக் கொண்டு சேவை சாதிக்கலானார். இத்திருக்காட்சியைக் கண்ட முனிவர் பேரானந்தம் அடைந்தவராய் எம்பெருமாள் திருப்பாதத்தருகில் அமரும் பாக்கியத்தை அருளும்படி வேண்டினார். பெருமாள் அவ்வாறே முனிவருக்கு அருளினார்.
இங்குப் பெருமாள் தரையில் ஆதிசேடன் மீது சயனித்தும், புண்டரீக முனிவர் திருவடியின் அருகில் கைகூப்பிய நிலையில் காட்சி தருகிறார். பூதத்தாழ்வார் இத்தலத்தில் மல்லிகை வனத்தில் உள்ள நீலோத்பலமலரில் தோன்றியவர். பெருமாள் இங்கு ஞானப்பிரான்- வலவெந்தை என அழைக்கப்படுகிறார். இங்குப் பல்லவர்களின் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கலைச்சின்னங்கள் உள்ளன. இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இந்த கோவிலின் புராண பெயர் திருக்கடல் மல்லை.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில்
» ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில்
» ஸ்தலசயனப் பெருமாள் கோவில்
» அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum