தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மருதமலை கோவில்

Go down

மருதமலை கோவில் Empty மருதமலை கோவில்

Post  birundha Sun Mar 24, 2013 5:38 pm

ஸ்தல வரலாறு.....

முருக கடவுளின் `ஏழாவது படைவீடாக'ச் சிறப்பு பெற்றுள்ளது மருதமலை. கோவையில் இருந்து வடமேற்கே 12.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருக்கிற இந்த மலையின் மத்திய பகுதியில் மருதாசலக் கடவுளின் கோவில் மகிமையோடு விளங்குகிறது.

மலையில் உள்ள கோவிலுக்கு செல்ல அடிவாரத்திலிருந்து வசதியாக படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் செல்வதற்கு ரோடு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அடிவாரத்தை கடந்து மேலே சற்று தூரம் சென்றதும் `தான்தோன்றி விநாயகர் காட்சியளிக்கிறார். இவருக்கு தனிக்கோவில் கட்டி உள்ளனர். உளி படாத இவரின் தோற்றும் அழகானது.

அடுத்து, இடும்பன் கோவில் உள்ளது. பெரிய பாறையின் முன்புறம் காவடி தூக்கிய கோலத்தில் உள்ள இடுபனை மறக்காமல் வணங்கிவிட்டு மேலே செல்ல வேண்டும். இடையில் ஆங்காங்கே உட்கார்ந்து இளைப்பாற மண்டபங்கள் உள்ளன. இரு மலைகளின் மத்தியில்... பரந்த மைதான வெளியில் இதயம் போல...

மருதாசலப் பெருமானின் கோவில் அமையப்பெற்றுள்ளது. கோவிலின் வலதுபுறம் தலவிருட்சமாகிய மருதமரம் உள்ளது. `மருதமலை' என இந்த மலைக்கு பெயர் உண்டானதற்கான காரணங்களில் இந்த மரமும் ஒன்றாக கருதப்படுகிறது. முருகக் கடவுளின் மீது அளவிலாத பக்திகொண்ட முனிவர் ஒருவர் காடாக அடர்ந்து கிடந்த இப்பகுதியில் பல வருடங்களாக தவம் மேற்கொண்டிருந்தார்.

அவருக்கு உண்டான அளவிலாத தாகமும், அசதியும் அவரைக் கீழே தள்ளி மயக்க நிலைக்கு ஆளாக்கிவிட்டன. மரத்தின் கீழே அவர் உருண்டு கிடந்தபொழுது, அந்த மரத்தின் அடிப்பகுதியிலிருந்து நீர் ஊற்று ஒன்று மேல்நோக்கிப் பொங்கி எழுந்து அவரை குளிர்வித்து மயக்கத்தை நீக்கித் தாகத்தை தணித்து புத்துயிர் அளித்தது.

அந்த மரம் மருதமரம் என்பதாலும் அதிலிருந்து தண்ணீர் (ஜலம்) பொங்கி வந்ததாலும் மருதாஜலம் என அந்த முனிவர் ஆனந்தத்தோடு பாடி துதித்தார். இதனால் இந்த இடம் மருதாஜலம் என ஆயிற்று. நாளடைவில் அது மருதாசலம் என மருவப்பெற்றது.

800 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருமுருகன் பூண்டிக் கல்வெட்டில் மருதமலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. பேரூர் தலபுராணத்தில் அபயப்படலம், மருதவரைப் படலம் ஆகியவற்றிலும் மருதமலை பற்றிய சிறப்புகள் இடம் பெற்றுள்ளன. மக்கள் இந்த மலையின் பெயரை தமக்கு இட்டுக்கொள்கிற வழக்கம், பனிரெண்டாம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum