தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்டிரமாணிக்கம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி கோவில்

Go down

கண்டிரமாணிக்கம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி கோவில் Empty கண்டிரமாணிக்கம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி கோவில்

Post  meenu Fri Jan 18, 2013 11:34 am

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழுமுண்டாம்
வீடியல் வழியதாக்கும் வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன்தோள் வலிகூறுவோர்க்கே.

ஸ்தல வரலாறு:

திருவாரூர்ஜில்லா, குடவாசல்தாலுக்கா (திருநரையூர் எனும் நாச்சியார் கோவில் சமீபம்) கண்டிரமாணிக்கத்தில் புராதனகாலமாககோவில்கொண்டு, எழுந்தருளியிருக்கும் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் இருந்து வரும் ஸ்ரீகோதண்டராமஸ்வாமிகோவில் காலத்தால் மிகவும் சிதிலமடைந்துள்ளது.

எம்பெருமானுடைய சங்கல்பத்தை முன்னிட்டு மேற்படி கோவில் திருப்பணி கைங்கர்யத்தை சீக்கிரத்தில் செய்து முடித்து, மஹா ஸம்புரோக்ஷணம் செய்வதாய் உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 52 ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலின் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என அறிகிறோம். எனவே புதிதாக திருப்பணிகைங்கர்யத்தை ஆஸ்திகாபிமானிகள் அவரவரது சக்தியானுஸாரம் கொண்டு பூர்த்தி செய்து, ஸ்ரீகோதண்டராமஸ்வாமி அனுக்ரஹகடாக்ஷத்திற்கு பாத்திரமாகுமாறு அன்புடன்கேட்டுக் கொள்கிறோம்.

கண்டிரமாணிக்கம்கோவில்சிறப்புகள்:

1. ஸ்ரீராமருக்கு உரித்தான திரேதாயுகத்தில் பரிமளித்த அறம்கண்டமாணிக்கம் என்பதனாது 32 அறங்கள் பரிபூரணித்த ராமராஜ்ய சக்திகள் செறிந்த திவ்யமான திருமால் தலமே இன்று கண்டிரமாணிக்கமாய் பெயர் திரிபடைந்துஉள்ளது.

2. ஸ்ரீராமஆரண்யகாண்டத்திற்கு முந்தைய், அயோத்தியா காண்டராமராஜ்யங்கண்ட, தொன்மையானஸ்ரீராமராக, ஆதிமூலதட்சிணபாவன, தெற்கு நோக்கிய ஸ்ரீகோதண்டராமராக இங்கு தோன்றி அன்றும் என்றும் அருள் பாலித்து வருவதால், இந்த ஆலயத்தின் ஆதிப்பழமையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது ஒரு பித்ரு முக்திதலம். மேலும் இது பல விஷ்ணுபதி, அனுபதிகள் ஒருங்கே குவிந்த உத்தமதலம்.

3. காஞ்சிவரதர், சுவாமிமலை வரதர் என வரதராஜ மூர்த்தங்களிலேயே பல உள்ளமையால் கண்டிரமாணிக்கத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவரதராஜப்பெருமாளுக்கு, ஆதிமகா வேத வரதராஜப் பெருமாள் என்று பெயர். தனிக்கோவில் நாச்சியாராக, ஸ்ரீபெருந்தேவிதாயார் இங்குபத்மாசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார்.

அமாவாசசைசித்தர், ஹேரண்டமகரிஷி, சகஸ்ரபாதமகரிஷி, வால்மீகி மகரிஷி போன்றோர் கண்டிரமாணிக்கம் ஆலயத்தில் தினமும் அமாவாசை மற்றும் விஷ்ணுபதி தோறும், தூல, சூட்சம வடிவுகளில் வந்து வழிபடுகின்றார்கள்.

4. இத்திருத்தலத்தில் கிழக்குநோக்கி, கைகட்டி, வாய்பொத்தி, பவ்யமாக ஸ்ரீராமரைசேவிக்கும், ஸ்ரீ அஞ்சலிபந்தன ஆஞ்சநேயரை உலகில்வேறு எங்கும் காண முடியாது. இவர் இங்கு வரும் பக்தர்களின் குறைகளை தெற்கு நோக்கிய ஸ்ரீகோதண்டராமரிடம் சொல்வதால் அவர்மானிட சமுதாயத்தின் சோகங்களையும், வேதனைகளையும் தம்முள்ஏற்று காப்பாற்றும்தலமே, கண்டிரமாணிக்கம் திருத்தலமாகும்.

இவ்வாறான உயர்ந்த உத்தமமான இத்திருக்கோவிலின் புனர்நிர்மாணத்திற்கு கைங்கர்யம் செய்யும் ஆஸ்திகாபிமானிகளுக்கு அடுத்த விநாடியே அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைத்து விடும் என்று மிகப்பழமையான நூல்கள் அறுதியிட்டு கூறுகின்றன.

மேற்படி ஆலயத்தை புதுப்பித்து விரைவில் மஹா ஸம்புரோக்ஷணம் செய்ய வேண்டியது நமது கடமையாகும்.


போக்குவரத்து வசதி :

இப்புகழ் பெற்ற திருத்தலம் கும்பகோணம் - நன்னிலம் - நாகப்பட்டிணம் பஸ்மார்க்கத்தில், பிலாவடி பஸ்நிறுத்தத்திலிருந்து வடக்கே 1/2 கிலோமீட்டர் தூரத்தில்அமைந்துள்ளது. கும்பகோணத்தில் 18 கிலோமீட்டர் தொலைவில்உள்ளது.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம் செல்ல பஸ் வசதி உள்ளது.

தொடர்புக்கு:

ஸ்ரீ ராம கைங்கர்ய சபா: 19 கண்டிரமாணிக்கம் & அஞ்சல், சேங்காலிபுரம்(வழி) பின்கோடு-612604. கும்பகோணம் R.M.S.

இங்ஙனம் : ஸ்ரீ ராம கைங்கர்ய சபா, கிராம வாசிகள் 19,கண்டிரமாணிக்கம்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum