தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெய்வங்கள் பிறந்தது எப்படி?

Go down

தெய்வங்கள் பிறந்தது எப்படி? Empty தெய்வங்கள் பிறந்தது எப்படி?

Post  meenu Sun Mar 24, 2013 3:40 pm


பிள்ளையார் -பார்வதி தேவி குளிக்கச் செல்லும் முன் தன் மேனி மஞ்சள், சந்தனத்தை எடுத்து காவலுக்கு 'பிள்ளையாக இரு' என்று ஆசீர்வதிக்கப்பட்டதில் உருவானவர்.

முருகன்- சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளாக வெளிப்பட்டவர்.

ஐயப்பன்-ஹரி (மோகினி)யும் ஹரனும் சேர்ந்ததால் கழுத்தில் மணி மாலையுடன் பம்பா நதிக்கரையில்தவழ்ந்தவர்.

மீனாட்சி அம்மன்- வேள்விக் குண்டத்தில் இருந்து பிறந்தவர்.

ஆண்டாள்- துளசிவனத்தில்இருந்துதோன்றியவர்.

வள்ளி- சர்க்கரைவள்ளி கிழங்கு விளையும் தோட்டத்தில் இருந்து உதித்தவர்.

சீதாதேவி- பூமிக்குள் இருந்துகிடைத்தவர். அதனால் அவர் மண்மகள் ஆகிறார்.

நரசிம்மர்- இரண்டயகசிபுவின் அரண்மனை தூணில் இருந்து சிங்க முகமும், மனித உடலுமாக வெளிப்பட்டவர்.

ராமர், லட்சுமணர், பரதன், சத்ருக்கனன்- வேள்வியின் போது கிடைத்த பாயாசம் அருந்தியதால் பிறந்தவர்கள்.

பிரம்மதேவர்- நாராயணரின் நாபிக்கமலம் (தொப்புள்) பகுதியில் இருந்து தோன்றியவர்.

சரஸ்வதி- பிரம்மதேவரின் நாவில் இருந்து பிறந்தவர்.

லட்சுமி- திருப்பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் கடைந்தபோது வெளிப்பட்டவர். (காமதேனு, தன்வந்திரி பகவான், ஐராவதம் என்ற வெள்ளை யானை, கற்ப கத்தரு என்ற சவுந்தர்ய மரம் போன்றவையும் திருப்பாற்கடலை கடைந்தபோது கிடைத்தவை)

நந்திதேவர்- சிலாத முனிவர் வயலை உழுதபோது பெட்டகத்தில் இருந்து கிடைத்தவர்.

பக்த பிரகலாதன்- அகத்திய முனிவரின் மந்திர உபதேசங்களில் இருந்து தோன்றியவர்.

சித்திரக்குப்தன்- சிவபெருமான் சித்திரம் வரைய அதில் இருந்து உயிர்ப்பெற்றவர்.

ஆஞ்சநேயர்- வாயு பகவான் அனுக்கிரகத்தால் அஞ்சனாதேவியின் புத்திரனாக பிறந்தவர். (நவக்கிரக கோள்கள் ஒன்பதும் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து வழிபட்டு கிரக அந்தஸ்த்தை பெற்றவர்கள்).

-மா.பா.சங்கரநாராயணன், முத்துப்பேட்டை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum