அய்யாவின் மகிமையும், பெருமையும்.
Page 1 of 1
அய்யாவின் மகிமையும், பெருமையும்.
எம்பெருமான் அய்யா வைகுண்டரை மனதில் நிறுத்தி அவர் நமக்கு அருளிய அன்பான உயர்ந்த சிறந்த கருத்துக்களை யார் யார் ஏற்றுக்கொள்கிறார்களோ கடைப்பிடிக்கிறார்களோ அவர்களே சிறந்தவர்கள். பண்பாளர்கள் மனிதநேயம் படைத்தவர்கள். ஒன்று சொன்னதை ஒன்றுகேட்டு ஒன்றுக்கொன்று நிரப்பாயிருக்கிறவர்களே பண்பாளர்கள்.
அப்படிப்பட்ட பண்பாளர்கள் ஒன்று கூடியிருக்கும் இடம் கலியில்லா இடம். இந்த பண்பு ஒரு வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் கலியில்லை. இது ஒரு ஊரில் இருந்தால் அந்த ஊரில் கலியில்லை. இது ஒரு நாட்டில் இருந்தால் அந்த நாட்டில் கலியில்லை. இந்த கலியன் இல்லாத இடத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் அய்யா நமக்கு அகில திரட்டு அம்மானை, அருள்நூல் ஆகிய ஆகமங்களின் மூலம் அய்யா நமக்கு உணர்த்துகிறார்.
அன்பே ஆயுதம், பொறுமையே வெற்றிக்கு விழி, நன்றி மறவாமையே உயர்வுக்கும், நல்ல பண்புக்கும் வழி, இவ்வளவு பண்பும் ஒன்றாக இருந்தால் பாராட்டும் குணம் தானாக வரும். பாராட்டும் குணம் இருந்தால் நல்ல நினைவுகள் உருவாகும். நல்ல நினைவுகள் உருவாவதில் உயர்வு தானாக வரும்.
இறையருள் கிடைக்கும் இதைதான் அய்யா அவர் அவர் நினைப்புக்கு தக்கவாறு இருக்கிறேன் என்கிறார். உன் மனம் என்ன நினைக்கிறதோ அதுதான் உன்வாழ்க்கைக்கு பயனும், நன்மையும், ஆகையால் நல்ல நினைவோடு நாம் இருக்கவேண்டும் நடக்கவேண்டும்.
நல்ல நினைவுகள் வளர பால் ஊட்டுகிறதுபோல் ஒவ்வொரு குழந்தைக்கும் சிறு வயதிலிருந்தே அய்யாவின் கருத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி வளர்க்க வேண்டும். அப்பொழுது எந்த குழந்தையாக இருந்தாலும் நல்ல குழந்தையாக தர்மயுக குழந்தையாக, பண்புள்ள குழந்தையாக பெரியவர்களை மதிக்கக் கூடிய குழந்தையாக நாட்டுக்கு பயன்படுகிற குழந்தையாக அன்பு கொடி குழந்தையாக வளரும் எல்லோருக்கும் பயன் உள்ள குழந்தையாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
தன்னை அறிந்து கொண்டால் தலைவன் நீ அறிவாய் நன்றி மறவாதே தான் பெரிது என்று எண்ணாதே இது அய்யா நமக்கு கொடுத்த பொக்கிசமான வார்த்தை. இதில் நன்றி என்பது நம்மை படைத்த இறைவன் முதல், தாய் தகப்பன், அண்ணன், தம்பி, சொந்த பந்தம், நண்பர்கள் இவர்கள் செய்ததை செய்து கொண்டு இருப்பதே மறவாமை. இதை கடைபிடித்தாலே உயர்வுக்கு வழி கிடைக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அரங்கன் மகிமையும் ஆழ்வார்கள் பெருமையும்

» விபூதி-ருத்ராட்சம்-ஐந்தெழுத்தின் பெருமையும் மகிமையும்
» துளசியின் சிறப்பும், பெருமையும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum