தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ ராகவேந்திரரின் மந்திராலயம்

Go down

ஸ்ரீ - ஸ்ரீ ராகவேந்திரரின் மந்திராலயம் Empty ஸ்ரீ ராகவேந்திரரின் மந்திராலயம்

Post  meenu Sun Mar 24, 2013 3:11 pm

ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த இடம் மன்சாலி எனப்படும் மந்த்ராலய கிராமம் நுங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் வசத்தில் உள்ள மந்த்ராலயம் இப்போதும் ஒரு குக்கிராமமே. ராகவேந்திரரின் மடத்தையும், மடத்தைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருக்கும் வேலைகளையும் நீக்கி விட்டுப்பார்த்தால், இக்குக்கிராமத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடலாம்.

மத்வாசாரியரால் மொழியப்பட்ட த்வைத நெறியில் வந்த ஆசார்யர்களுள் முக்கியமானவர் ராகவேந்திரர். இவருக்கு முன்பு வியாசராஜ யதி (வியாசயதி ராஜர்), சுரேந்திரர், விஜயீந்த்ர தீர்த்தர், சுதீந்திரர் போன்றவர்கள் மத்வத்தை முன்னெடுத்தவர்கள். மத்வருக்குப் பிறகு ராகவேந்திரரின் காலமே மத்வ, த்வைதத்தின் பொற்காலம் என்று அறியப்படுகிறது.

1595ல் புவனகிரியில் பிறந்த ராகவேந்திரர், வேதங்களைக் கற்று, உபநயனம் செய்துகொண்டு, திருமணம் செய்துகொண்டு, சன்னியாசம் மேற்கொண்டு, பாத யாத்திரை சென்று, வழியில் பல்வேறு வாதங்களை மேற்கொண்டு பலரை வென்று, இறுதியில் மாஞ்சாலி (மன்சாலி என்றும் சொல்லப்படுகிறது) என்னும் மந்த்ராலயத்தில் ஜீவ சமாதி அடைந்ததாக அவரது வாழ்க்கை வரலாறு விவரிக்கிறது. ராகவேந்திரர் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் முழுவதுமே அவரை ஒரு சித்தராகவும் மகானாகவுமே காட்டுகின்றன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மஹான் ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமைகள்
» ஸ்ரீ மகா அஷ்ட பைரவர் மந்திராலயம்
» ஸ்ரீ மகா அஷ்ட பைரவர் மந்திராலயம்
»  ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர – உடன் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை
» ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்(தமிழ்ப் பாடல்கள்) ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை(விளக்க உரை)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum