ராகு-கேது தவமிருந்து வழிபட்ட சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்
Page 1 of 1

ராகுவும், கேதுவும் அசுர வடிவமாக இருந்த தங்களின் தோஷம் நீங்க தவமிருந்து இறைவனை வழிபட்டு கிரக பதவியை அடைந்தனர். அவர்கள் இறைவனை பூஜித்த தலம் சீர்காழியில் உள்ள நாகேஸ்வரமுடையார் கோவிலாகும்.
இங்கு நாகேஸ்வரமுடையார், பொன்னாகவல்லி ஆகியோர் உள்ளனர். இக்கோவிலில் ராகு, கேதுவுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. ராகுவின் நண்பன் சனி என்பதால், சனி தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருக்கிறார். இது அபூர்வம் என்று கூறப்படுகிறது.
ஸ்தல வரலாறு:
பூர்வ காலத்தில் தேவர்களும், அசுரர்களும் கூடி மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலை கடைந்தார்கள். அதிலிருந்து லட்சுமி, தன்வந்திரி, சிந்தா மணி, ஐராவதம், ஆலகால விஷம், காமதேனு முதலிய தோன்றின.
தொடர்ந்து நடை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு முதலியவற்றை நீக்கும் மருந்தாக அமிர்தம் விளங்கியது. அந்த அமிர்தத்தை தேவர்களும், அசுரர்களும் உண்ண போட்டியிட்டனர். அசுரர்கள் அமிர்தத்தை உண்டால் அவர்களுக்கு அழிவு இருக்காது.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே எப்போதும் சண்டை நடந்து கொண்டேயிருக்கும் என்று எண்ணிய மகாவிஷ்ணு, அசுரர்களை எப்படியாவது அமிர்தத்தை உண்ணாமல் தடுத்துவிட வேண்டும் என்று மோகினி அவதாரம் எடுத்தார்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் தோன்றினார். மோகினியின் அழகை கண்ட அசுரர்கள் மதி மயங்கினர். உணர்விழந்து செயலற்று நின்றனர்.
தலை துண்டிப்பு:
இது தான் சரியான நேரம் என்று உணர்ந்த மோகினி உருவிலிருந்த மகாவிஷ்ணு தேவர்களுக்கு அமிர்தத்தை கொடுத்தார். அசுரர்களில் ஒருவரான விப்ரசித்திக்கும், ரணியனின் தங்கை சிம்ஹி கைக்கும் பிறந்த ஸ்வாபானு எனும் அசுரன் தேவ வடிவம் கொண்டு சூரிய, சந்திரர்களுக்கு நடுவே நின்று தேவாமிர்தத்தை வாங்கி உண்டான்.
இதனை அறிந்த சூரிய, சந்திரர்கள் தேவாமிர்தத்தை பரிமாறி கொண்டிருந்த மகாவிஷ்ணுவிடம் குறிப்பால் உணர்த்த அவர் தன் கையிலிருந்த சட்டுவத்தால் (கரண்டி) அந்த அசுரனை ஓங்கி அடித்தார். அவர் அடித்த வேகத்தில் அசுரனின் கழுத்து துண்டிக்கப்பட்டு தலை, சிரபுரம் என்ற தற்போதைய சீர்காழியிலும், உடல் செம்பாம்பியின் குடியிலும் விழுந்தது.
தேவாமிர்தம் உண்டதால் அந்த அசுரனது இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாக மாறியது. இந்த அரவங்கள் சிவபெருமானை தியானித்து காற்றை மட்டும் உணவாக கொண்டு கடும் தவம் புரிய இறைவன் பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார்.
அப்போது அந்த அரவங்கள் சிவபெருமானிடம் தங்களை காட்டிக் கொடுத்த சூரிய, சந்திரனை விழுங்கும் சக்தியையும், அகில உலகையும் ஆட்டிப் படைக்கும் வலிமையையும் தங்களுக்கும் அருளுமாறு வேண்டியன. சூரிய, சந்திரர்கள் உங்களுக்கு பகைவர்கள்தான். ஆனால் அவர்கள் அகில உலகிற்கும் இன்றியமையாதவர்கள்.
எனவே அமர பட்சம், அமாவாசை, பவுர்ணமி, கிரஹ நாட்களில் நீங்கள் அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தலாம் என்று சிவபெருமான் வரம் அளித்தார். மேலும் இறைவன் அருளால் மனித தலையும், பாம்பு உடலும் கொண்டு ராகுவும், பாம்பு தலையும் மனித உடலும் கொண்டு கேதுவும் தோன்றினார்கள். அத்துடன் அதுவரை இருந்த 7 கிரகங்களுடன் அவர்களையும் சேர்த்து 9 கிரகங்களாக (நவக்கிரகம்) விளங்கும்படி வரம் அளித்தார்.
அவ்வாறு அமிர்தம் உண்ட அசுரன், சிரம் வெட்டப்பட்டு சீர்காழியில் விழுந்தான். எனவே இத்தலம் சிரபுரம் என்றும், ஆதி ராகுத்தலமாகவும் சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில் விளங்குகிறது. மேலும் இத்தலத்து இறைவன் ராகு, கேதுவுக்கு அருள் செய்து சூரிய, சந்திரர்களை வெல்லும் வலிமையையும், கிரக பதவியையும் அளித்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum