வித விதமான நைவேத்தியம்
Page 1 of 1
வித விதமான நைவேத்தியம்
திருவாரூர் தியாகராஜப்பெருமானுக்கு நெய் முறுக்கு சிறப்பு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. திருத்தணி முருகப்பெருமானுக்கு அப்பம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. காஞ்சீபுரம் வரதராஜ பெருமாளுக்கு இட்லியை நைவேத்தியமாக படைக்கின்றனர்.
திருப்பெருந்துறை ஆவுடையாருக்கு காலை வேளையில் புழுங்கல் அரிசிச் சோறும், கீரையும் நிவேதனம் செய்து வழிபடுகிறார்கள். பிள்ளையார்ப்பட்டி கற்பக விநாயகருக்கு உச்சிக்கால வேளையில் பலவித காய்கறிகள் நிவேதனம் செய்கிறார்கள்.
கேரள மாநிலம் முஜங்காவு பார்த்தசாரதி கோவிலில் வெள்ளரிக்காய் நைவேத்தியம் சிறப்புற படைக்கப்படுகிறது. நிவேஸ்வரம் சண்ட யோகேஸ்வரிக்கு குறுமிளகு நைவேத்தியம் செய்யப்படுகிறது. திருவெண்காடு ராமர் திருக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு ஊற வைத்த அரிசியை நைவேத்தியமாக படைக்கிறார்கள்.
குடந்தை சாரங்கபாணி கோவிலில் பயத்தம் பருப்பு, வெல்லம், நெய் கொண்டு தயாரிக்கப்படும் கும்மாயம் என்னும் பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. ஹரித்வாரில் உள்ள மானஸா தேவிக்கு அரிசிப் பொரியை நிவேதனம் செய்கின்றனர்.
கேரள மாநிலம் சட்டம்பார் தலத்தில் பச்சரிசி, மிளகு, மஞ்சள் ஆகிய மூன்றையும் பனை ஓலையால் செய்யப்பட்ட கிண்ணத்தில் வைத்து இறைவனுக்கு படைத்து வழிபடுகின்றனர்.
மதூர் அனந்தீஸ்வர சித்தி விநாயகருக்கு, பச்சப்பம் படைக்கப்படுகிறது. கலயிக்காடு துர்க்கா பகவதிக்கு வெள்ளிக் கிண்ணத்தில் பசு நெய் வைத்து நிவேதனம் செய்கிறார்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வித விதமான நைவேத்தியம்
» ஆவி நைவேத்தியம்
» சுருட்டு நைவேத்தியம்
» தேங்காய் துருவல் நைவேத்தியம்
» 5 விதமான தோஷங்கள்
» ஆவி நைவேத்தியம்
» சுருட்டு நைவேத்தியம்
» தேங்காய் துருவல் நைவேத்தியம்
» 5 விதமான தோஷங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum