மரப்பாச்சி கல்யாணம்
Page 1 of 1
மரப்பாச்சி கல்யாணம்
முற்காலத்தில் பெரிய குடும்பங்கள் இருந்தன. அவர்கள் வீட்டில் எத்தனை பெண்கள் இருந்தாலும் காலா காலத்தில் கல்யாணம் நடந்து அனைவரும் சுகமாய் இருந்தனர். இதற்குக் காரணம் மரப் பாச்சி கல்யாணம்தான் என்று நம்பினார்கள். அப்போதெல்லாம் எல்லார் வீட்டிலும் கருங்காலி மரத்தால் செய்த மரப்பாச்சிகள் இருக்கும். பெரிய மரப்பாச்சி ஆணாகவும் சின்ன மரப்பாச்சி பெண்ணாகவும் சொல்லப்படும்.
வருடம் ஒருமுறை திருப்பதி செல்வார்கள். பெருமாளையும் தாயாரையும் சேவித்துவிட்டு வரும்போது இந்த மரப்பாச்சிகளை வாங்கி வருவார்கள். பங்குனி மாதத்தில் மரப்பாச்சி கல்யாணம் செய்வார்கள். வீட்டில் இதை ஒரு சிறு கல்யாணம்போலவே செய்வார்கள்.
மறுநாள் அந்த மரப்பாச்சிகளை தானம் கொடுத்துவிடுவார்கள். காலப்போக்கில் இவ்வழக்கம் மறைந்துவிட்டது. இருப்பினும் திருப்பதி சென்று பெருமாளுக்கும் தாயாருக்கும் கல்யாண உற்சவம் நடத்தி தங்கள் கல்யாணத் தடைகளை நீக்கிக் கொள்ளலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நைமிசாரண்யத்தில் ஸ்ரீநிவாச கல்யாணம்
» 60 ம் கல்யாணம்
» 60-ம் கல்யாணம்
» அறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்?
» த்ரிஷாவுக்கு கல்யாணம்!
» 60 ம் கல்யாணம்
» 60-ம் கல்யாணம்
» அறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்?
» த்ரிஷாவுக்கு கல்யாணம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum