தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பம் நீங்க

Go down

நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பம் நீங்க Empty நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பம் நீங்க

Post  meenu Sun Mar 24, 2013 2:03 pm

பைரவருக்கு தயிர் அன்னம் நைவேத்யம் செய்து ஏழைகளுக்கு வழங்கி, நெய்தீபம் ஏற்றி, சகஸ்ராம அர்ச்சனை செய்ய வேண்டும்.

குழந்தை பேறு கிடைக்க..... தேய்பிறை அஷ்டமி திதியில் நெய்தீபம் ஏற்றி, பைரவருக்கு சிவப்பு அரளியால் அர்ச்சனை செய்து ஏழைக் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.

வறுமை நீங்க ......... நெய்தீபம் ஏற்றி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பைரவருக்கு வில்வம், அரளி, பூவினால் அர்ச்சனை செய்தால் வறுமை நீங்கும். வளர்பிறை அஷ்டமியில் சதுர்கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 ஒரு ரூபாய் காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை அலுவலகம் அல்லது வீடுகளில் பணப்பெட்டியில் வைத்து பூஜித்து வந்தால் செல்வம் குறையாது. செழிக்கும். தினமும் காலையில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவராய நமக என்று ஜெபிப்பது நன்மை பயக்கும்.

இழந்த பொருள், சொத்தை மீண்டும் பெற்றிட....... நல்லெண்ணெய் ஊற்றி அகல் விளக்கில் மிளகை சிறு மூட்டையாக கட்டி வைத்து 27 நாள் தீபம் ஏற்றிட இழந்த பொருள், சொத்து மீண்டும் கிடைக்கும்.

சனிபகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க......... சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களை தரமாட்டார். எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கும். தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும்.

6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைபட்ட திருமணம் கைகூடும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும். அஷ்டமி திதியும்,

பைரவர் வழிபாடும்... அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் ஐஸ்வர்யம், சுகம், பொன் பொருளையும் தருகின்றார். காரணம் அஷ்டமி திதியில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வணங்கி பைரவரின் அருளால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அஷ்டலட்சுமிகள் அருள் புரிவதால் நாமும் அஷ்டமி தியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலையில் இருந்து விரதமிருந்து ஒருவேளை உணவு உண்டு பைரவருக்கு நம்மால் முடிந்தவரை பூசை செய்திட நினைத்தது எல்லாம் நடக்கும்.

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு..... இவர் அமர்ந்த நிலையில் தன் மடியில் பைரவியை அமர்த்திக் கொண்டு ஒரு கரத்தில் அமுத கலசமும், ஒரு கரத்தில் சூலமும் கொண்டு வைர கிரீடமும் பட்டு வஸ்திரமும் அணிந்து தம்பதிசமேதராக காட்சி தருகின்றார். இவரை அஷ்டமி திதி மற்றும் பவுர்ணமி நாளில் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் வணங்கினால் சகல சம்பத்தும் பொன் பொருளும் கிட்டும்.

தேய்பிறை அஷ்டமி... ஸ்ரீபைரவருக்கு பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.. நல்லருள் கிட்டும். இலுப்பை எண்ணை, விளக்கெண்ணை, தேங்காய் எண்ணை, நல்லெண்ணை, பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல்விளக்கில் ஏற்றலாம். ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum