சனி தோஷம் நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு
Page 1 of 1
சனி தோஷம் நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு
ஆஞ்சநேயர், சிவபெருமானின் அம்சம் ஆவார். சூரிய குமாரனான சனியோ, சிவபெருமானிடம் சனீஸ்வரன் என்று ஈஸ்வர பட்டத்தைப் பெற்றவர். ஆஞ்சநேயர் மார்கழி நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவராதலால் சனிபகவான் 7 1/2 ஆண்டு காலம் அவரைப் பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம்.
ஒரு முறை ஆஞ்சநேயர் தனது மாளிகையின் வெளிப்புறம் தனது வாலை நீட்டியபோது, சனிபகவான் இது தான் சமயம் என்று ஆஞ்சநேயர் வாலைக் கட்டியாகப் பிடித்துக் கொண்டார். அப்போது ஆஞ்சநேயர் என் ராம ஜபத்துக்கும், பூஜைக்கும் உங்களால் ஊறு வரலாமா? என்னை விட்டு விடுங்கள் என்றார்.
அதற்கு சனி பகவான் நான் அந்த சர்வேஸ்வரனையே பிடித்துள்ளேன் என்றார். உடனே ஆஞ்சநேயர் ஆனந்தம் தாங்காமல் வாலை சுழற்றி, சுழற்றி துள்ளிக்குதித்து ராமநாம சங்கீர்த்தனத்தை பாடிக்கொண்டு, ஆடத்தொடங்கினார். வாலின் நுனியில் அமர்ந்திருந்த சனிபகவான் மிகுந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்.
ஆஞ்சநேயர் சனி பகவானிடம், நீ என்னை பிடிப்பதாக கூறிய ஏழரை ஆண்டுகாலம் குதித்துக் கொண்டே இருப்பேன் என்றார். இதனால் அதிர்ந்து போன சனிபகவான் தமக்குள் ஓர் முடிவிற்கு வந்து, ஏழரை ஆண்டுகள் நான் பிடிப்பேன் என்று ஆஞ்சநேயர் பயந்ததே, நான் அவரை ஏழரை ஆண்டுகள் அவரைப் பிடித்ததற்குச் சமம்!
என்று எண்ணியவராய் ஆஞ்சநேயர் வாலை விட்டு கீழே இறங்கினார் சனிபகவான்! உடனே ஆஞ்சநேயர் உள்ளிருந்த படியே, ச்ருதகர்மா! எம்மைத் துதிப்போர்களை நீ எந்த வகையிலும் துன்புறுத்தலாகாது. அவர்களுக்கு நல்ல மேன்மைகளையும் சந்தோஷத்தையும் அளிக்க வேண்டும்! அப்படியே ஆகட்டும் ஆஞ்சநேயா! என்றார் சனிபகவான்!
எல்லா சிவன் கோவில்களிலும் சனிபகவான் சன்னதி எதிரில் ஆஞ்சநேயர் சன்னதியைக் காணலாம். ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டால் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார். தம்மால் அவர்கட்கு எவ்வித கஷ்டமும் நேராமல் அருள் புரிவார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» துன்பம் போக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
» துன்பம் போக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
» ஏழரை சனியை விரட்டும் ஆஞ்சநேயர் வழிபாடு

» கண்ட தோஷம் நீங்க பரிகாரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum