தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினியை இயக்குகிறார் ஐஸ்வர்யா

Go down

ரஜினியை இயக்குகிறார் ஐஸ்வர்யா Empty ரஜினியை இயக்குகிறார் ஐஸ்வர்யா

Post  ishwarya Sat Mar 23, 2013 2:52 pm

3 படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் ஐஸ்வர்யா. இந்த முறை அவரது தந்தை ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் அக்ஷய்குமார், பரேஷ் ராவல் நடிப்பில் வெற்றிபெற்ற ‘ஓ மை காட்' என்ற படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் அக்ஷய்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கடவுளே இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு ஏற்படும் பிரச்னையை சமாளிக்க கடவுளே அவனுக்கு துணையாக வருவதே 'ஓ மை காட்' திரைப்படத்தின் கதை. இதில் கடவுள் வேடத்தில் அக்ஷய் குமார் நடித்திருந்தார். படம் முழுவதும் போலி சாமியார்களை தாக்கும் காட்சிகள் மற்றும் மூடநம்பிக்கைகளை தோலுரித்துக் காட்டும் வசனங்கள் என விறுவிறுப்பாக இருக்கும். இதுவே இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. கோச்சடையான் திரைப்பட பணிகள் முடிந்ததும், இந்தப் படத்துக்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum