நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு
Page 1 of 1
நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு
நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை கூறிய பெண் அவருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகர் மன்சூர் அலிகான் மீது 1998-ம் ஆண்டு பாரதி சர்மா என்ற பெண் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தன்னை மன்சூர் அலிகான் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகக் கூறியிருந்தார். அந்தப் புகார் தொடர்பாக மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் அவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது. இந்த நிலையில், தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி மன்சூர் அலிகான் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். என் மீது பொய்யான புகார் அளித்து, எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியதால் எனக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு பாரதி சர்மாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த மனு மீது நீதிபதி டி. மதிவாணன் விசாரணை நடத்தினார். ஆனால், பாரதி சர்மா தரப்பில் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் மனுவை விசாரித்த நீதிபதி, தன் மீதான பாலியல் புகார் பொய்யானது என்பதற்கான ஆதாரங்களை மனுதாரர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளர். ஆகவே, மனுதாரர் கோரியுள்ள இழப்பீட்டுத் தொகையை பாரதி சர்மா வழங்கிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கற்பழிப்பு வழக்கு: மன்சூர் அலிகானுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தர கோர்ட் உத்தரவு
» நடிகர் மன்சூர் அலிகான் மீது கந்து வட்டிப் புகார் – போலீஸ் விசாரணை
» நடிகர் ஜெயப்பிரகாஷ் மீது ரூ 20 லட்சம் மோசடி புகார்
» நடிகர் விஜய் ரூ 8 லட்சம் நலத்திட்ட உதவி: கூட்டம் குவிந்ததால் போலீஸ் தடியடி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum