தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழகத்தில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

Go down

தமிழகத்தில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் Empty தமிழகத்தில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

Post  ishwarya Sat Mar 23, 2013 2:10 pm

பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது 63வது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். இந்த ஆண்டு 12-12-12 என்ற அரிய நாளில் பிறந்த நாள் வந்ததால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ரஜினியின் பிறந்த நாளை அவர்கள் கொண்டாடினர்.

ரஜினி பிறந்த நாள்: 3 மணி நேரம்
நீரில் மிதந்து ரசிகர் தியானம்
தேனி அருகே வீரபாண்டியில், நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழவும், உலக அமைதி வேண்டியும், புதன்கிழமை 3 மணி நேரம் தண்ணீரில் மிதந்தவாறு ரஜினி ரசிகர் தியானம் செய்தார்.
கோம்பை ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் விஜயன் (50). இதே ஊரில் உணவகம் நடத்தி வருகிறார். ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, இவர் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில், கண்ணீஸ்வரமுடையார் கோயில் ஆகியவற்றில் வழிபாடு நடத்தினார். பின்னர், வீரபாண்டியில் உள்ள கிணற்றில் கைகளைக் கூப்பி நீரில் மிதந்தவாறு 3 மணி நேரம் வரை தியானத்தில் ஈடுபட்டார்.
ரஜினிகாந்த் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழவும், உலக அமைதி வேண்டியும் தண்ணீரில் மிதந்தவாறு தியானம் செய்ததாகவும், இதுவரை ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காத எனக்கு, விரைவில் அந்த வாய்ப்பை அளிக்க வேண்டும் என்றும், இறைவனை வேண்டிக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

ரஜினி பிறந்த நாள்: மாணவர்களுக்கு உணவு
பாளையங்கோட்டையில், நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் புனித கபரியேல் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை காலை உணவு வழங்கப்பட்டது.
மன்ற மாவட்டத் தலைவர் எஸ். பானுசேகர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எஸ். பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். எஸ். பகவதிராஜன் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ. சக்திசுப்பிரமணியன், ஆசிரியை எஸ். ஈஸ்வரி, சூரியா கணேசன், வீரமணிகண்டன், அம்பலவாணன், மணி, தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆண்டிபட்டியில் ரஜினி பிறந்த நாள் விழா
ஆண்டிபட்டி நகர ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் சார்பில், ரஜினியின் 63-வது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு, ஆண்டிபட்டி பாலவிநாயகர் திருக்கோயில், மீனாட்சியம்மன் திருக்கோயில் மற்றும் சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
விழாவுக்கு, ஆண்டிபட்டி ரஜினிகாந்த் மன்ற நகரச் செயலர் ராஜஹரிகாந்த் தலைமை வகித்தார். நகரத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். இதில், ரஜினிகாந்த பூரண நலம் வேண்டி பிரார்த்தனை மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், நகரப் பொருளாளர் பிருந்தாவனம், சுரேஷ், தெய்வேந்திரன், ரஜினி பிரபாகர், குருமூர்த்தி, காசிராஜன், கவுன்சிலர் முருகன், படையப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு
கட்டணமில்லா பேருந்து இயக்கம்
பழனியில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர் மன்றங்கள் சார்பில் கட்டணமில்லா பேருந்து இயக்கப்பட்டது.
வித்தியாசமான நாளான 12-12-12 அன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அமைந்துள்ளதால், அவரது ரசிகர்கள் சிறப்பாகக் கொண்டாடினர். இதையொட்டி, பழனி அருகே பாலசமுத்திரத்தைச் சேர்ந்த தர்மத்தின் தலைவன் ரஜினி ரசிகர் மன்றம், மாவீரன் ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் பாயும்புலி ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்கள் சார்பில், கட்டணமில்லா பேருந்து இயக்கப்பட்டது.
பழனியில் இருந்து பாலசமுத்திரம் செல்லும் மினி பஸ்ûஸ ஒப்பந்த முறையில் வாடகைக்கு எடுத்த ரசிகர் மன்றத்தினர், ரஜினியின் பிறந்தநாளான புதன்கிழமை முழுவதும் அந்த பஸ்ஸில் எங்கு ஏறி, இறங்கினாலும் கட்டணம் இல்லை என அறிவித்திருந்தனர்.
இதன்மூலம், ஏராளமான கூலித் தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெற்றனர்.
பாலசமுத்திரத்தில் கேக் வெட்டி பஸ் இயக்கத்தை, மாவட்டத் தலைமை ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் பாணி, பழனி நகரத் தலைவர் முருகானந்தம், பொறுப்பாளர் சிக்கந்தர் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
மேலும், முரட்டுக்காளை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.

ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை மலைக்கோயிலில் ரஜினிகாந்தின் 63-வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
தேவகோட்டை மலைக்கோயிலில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவி லில் சுவாமிக்கு ரஜினி பெயரில் விஷேச அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக நகர்மன்ற துணைத் தலைவர் சுந்தரலிங்கம், நகர் செயலாளர் படையப்பா ரவி, இணைச் செயலாளர் ரஜினி மகேஷ், அமைப்பாளர் சரவணன், பொறுப்பாளர் மலைச்சாமி, ரஜினிகுமார், கணேசன், அழகுமளிகைகண்ணன், மதியழகன், ராமநாதன், விஜயேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்த் பிறந்த நாள் திருச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்
திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் 63-வது பிறந்த நாளையொட்டி, திருச்சியில் அவரது ரசிகர்கள் இனிப்புகள் வழங்கியும், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்தும் புதன்கிழமை கொண்டாடினர்.
ரஜினிகாந்த்தின் இந்த பிறந்தநாள் 12.12.12 என்ற நாளில் வந்துள்ளதை சிறப்பு நிகழ்வாகக் கருதி ரசிகர்கள் ஆராவாரத்துடன் இந்த விழாவைக் கொண்டாடினர்.
ரஜினி ரசிகர் மன்றம் சார்பில், திருச்சி புத்தூரில் உள்ள பார்வையற்ற மகளிருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாவட்டத் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் உணவு வழங்கப்பட்டது.
ரஜினி பிறந்தநாளையொட்டி, அவர் நடித்த சிவாஜி திரைப்படம் 3டி தொழில்நுட்பத்துடன் புதன்கிழமை திரையிடப்பட்டது.
திருச்சி சோனா திரையரங்கில் இத்திரைப்படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஆகியவற்றை மாநகர்
முழுவதும் அவரது ரசிகர்கள் ஒட்டியிருந்தனர்.

ரஜினி காந்த் பிறந்த நாள் விழா
நடிகர் ரஜினி காந்த் 63-ஆவது பிறந்த நாள் விழா ராசிபுரத்தில் புதன்கிழமை (டிச.12) கொண்டாடப்பட்டது.
ரஜினியின் பிறந்த நாள் 12-12-12 நாளன்று இடம் பெற்றதால், அவரது ரசிகர்கள் இதை உற்சாகமாகக் கொண்டாடினர்.
ராசிபுரம் ரஜினி காந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகில் ரஜினியின் 30 அடி கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்தனர். பின்னர் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
இதைத்தொடர்ந்து, திரளான பெண்கள் பங்கேற்ற 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவியில் மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடத்தினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum