தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழைய படங்களின் தலைப்பு வேண்டாம்: விஜய்

Go down

பழைய படங்களின் தலைப்பு வேண்டாம்: விஜய் Empty பழைய படங்களின் தலைப்பு வேண்டாம்: விஜய்

Post  ishwarya Sat Mar 23, 2013 1:38 pm

துப்பாக்கி வெற்றிக்குப் பிறகு ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்திற்கு முதலில் தலைவன் என்ற தலைப்பை தேர்வு செய்திருந்தனர்.

ஆனால் தலைவன் என்ற பெயரில் வேரொரு படம் தயாராகி வருவதை அறிந்த படக்குழுவினர் உடனே ரஜினியின் படத்தலைப்பான தங்கமகன் என்ற பெயரைச் சூட்ட முடிவு செய்தனர்.

மேலும் இது குறித்து சம்மந்தப்பட்ட தயாரிப்பு தரப்பை அனுகியுள்ளனர். ஆனால் தயாரிப்பு தரப்போ தங்கமகன் தலைப்பை பயன்படுத்த அனுமதி மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் மற்றப் படத் தலைப்புகளை வைக்கலாமா என யோசித்த போது அதற்கும் எதிர்ப்பு கிளம்பவே மீண்டும் தலைப்பு வேட்டையில் இறங்கி இருக்கிறது படக்குழு.

இதனிடையே தனது படங்களுக்கு பழைய படங்களின் தலைப்பு வேண்டாம். நல்ல பொருத்தமான புதிய தலைப்பை யோசியுங்கள் என இயக்குனரிடன் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படமும் தலைப்பு பிரச்னையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum