தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

"சிவாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்துவேன்'

Go down

"சிவாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்துவேன்' Empty "சிவாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்துவேன்'

Post  ishwarya Sat Mar 23, 2013 1:13 pm



நடிப்புக்கு இலக்கணமாக திகழ்ந்த சிவாஜிக்கு "பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவேன் என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.

மதுரை மாநகர் மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் "பராசக்தி' திரைப்படத்தின் வைரவிழா ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்றது.

பேரவை மாநிலத் தலைவர் கே.சந்திரசேகரன் தலைமை வகித்து பேசுகையில், சிவாஜி தனது முதல் படமான "பராசக்தி'யிலேயே முத்திரை பதித்தவர் என்பதை உலகறியும். இந்த படம் 60-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்து வெற்றியும் பெற்றுள்ளது. முதல் காட்சி பார்த்தவர்களை, அப்படியே, 2ஆவது காட்சியையும் பார்க்கவைத்த சாதனைப் படம் இது. இந்தப் படத்தில் நடித்த சிவாஜி பெற்ற சம்பளம் ரூ.25. ஆனால், 200 ஆண்டுகள் ஆனாலும் அழியாத திரைக்காவியத்தை அவர் படைத்துவிட்டு சென்றுள்ளார் என்றார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி. பேசியது: வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் முதல் அனைத்து தேசபக்தர்களையும் நடிப்பாற்றலால் மக்கள் மன்றத்தில் நடமாட விட்டவர் சிவாஜி. அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. பெரிய தலைவர்கள் எல்லாம் ஜாதிய வளையத்துக்குள் தள்ளப்பட்டு முடக்கப்பட்டு விடுவர்.

ஆனால், அவற்றையெல்லாம் கடந்து தமிழகத்திலுள்ள ஒவ்வொரு ஆண், பெண் மனதிலும் குடியேறியவர் சிவாஜி. அவரது நடிப்பாற்றல் பற்றி பேசிக்கொண்டே போகலாம். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும், அந்த பாத்திரமாக மாறிக்காண்பித்தவர் சிவாஜி. அவரைப்போன்று இனி ஒரு நடிகர் பிறக்க முடியாது. நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர். எத்தனை சாதனை நடிகர்கள் வந்தாலும், அவரது நடிப்பை பின்பற்றித்தான் வரமுடியும். அவரை விஞ்சி நடிக்க முடியாது.

அத்தகைய மாமேதைக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் நான் பேசுவதற்கு ஆதரவு கொடுக்க தமிழகத்தைச் சேர்ந்த பல எம்பிக்களை சந்தித்தேன். புதுதில்லியில் முக்கிய பதவிகளை அலங்கரிப்பவர்கள் சிலர், இந்த வேலை உனக்கு எதற்கு என ஒதுங்கினார்கள்.

அவர்கள் யார் என்பதை பற்றி நான் வெளிப்படையாக கூறவிரும்பவில்லை.

இதுதான் தமிழகத்தின் தலையெழுத்து. உயர்ந்த மாமனிதன் உயிரோடு இல்லாவிட்டால், அவரது புகழை மறைத்து விடமுடியுமா? அந்த மாமேதைக்கு பாரத ரத்னா விருது வழங்கினால் இந்தியாவுக்கும் பெருமை, மத்திய அரசுக்கும் பெருமை. அந்த விருதை அவருக்கு வழங்கும்வரை மத்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன்.

அவரைப் போன்று நடிப்பில் சாதித்த நகைச்சுவை நடிகர் நாகேஷ், வில்லன் பாத்திரங்களில் சாதித்த நடிகர் நம்பியார், இசைச் சக்கரவர்த்தி எம்.எஸ். விஸ்வநாதன் போன்றவர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகூட வழங்கவில்லை. இவர்களுக்காகவும் நான் போராடி வருகிறேன் என்றார் அவர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் திலகம் சிவாஜிக்கு பாரத ரத்னா வழங்க பாராளுமன்றத்தில் பேசுவேன் – திருச்சி சிவா
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!
» விஞ்ஞானிகளின் வாழ்வினிலே.... பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம்
» இலவச பொருட்களை வழங்க மாணவர்களிடம் பணம் வசூல் செய்த தலைமை ஆசிரியர் திங்கள்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். சிதம்பரம் வட்டம் புதுசத்திரம் அருகே சாமியார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன். இவர் மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்க ரூ.10
» சிவாஜிக்கு பெரிய ரசிகன் யார்? – கமல்ஹாஸன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum