தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேவை வரி விவகாரம்: சரத்குமார் தலைமையில் குழு தில்லி பயணம்

Go down

சேவை வரி விவகாரம்: சரத்குமார் தலைமையில் குழு தில்லி பயணம் Empty சேவை வரி விவகாரம்: சரத்குமார் தலைமையில் குழு தில்லி பயணம்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:49 pm



திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறை, திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் ஏனைய திரைப்படத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பிரிவினருக்கும் மத்திய அரசு, 12.3 சதவீதம் சேவை வரி விதித்துளளது.

இந்த சேவை வரி கடந்த ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ் திரையுலகத்தினர் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, திரையுலகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சேவை வரியை ரத்து செய்யக் கோரி தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 7ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில் சேவை வரி பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வந்துள்ளது. இதற்கான கலந்துரையாடல் கூட்டம் நாளை தில்லியில் நடக்கிறது. இக்கூட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலகின் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் 20 பேர் நாளை தில்லி புறப்பட்டுச் செல்ல இருக்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum