தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

24ம் தேதி ஹாலிவுட் நடிகர்களுக்கு விஸ்வரூபம் சிறப்பு காட்சி: கமல்

Go down

24ம் தேதி ஹாலிவுட் நடிகர்களுக்கு விஸ்வரூபம் சிறப்பு காட்சி: கமல் Empty 24ம் தேதி ஹாலிவுட் நடிகர்களுக்கு விஸ்வரூபம் சிறப்பு காட்சி: கமல்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:35 pm



வரும் 24ம் தேதி ஹாலிவுட் நடிகர்களுக்கு விஸ்வரூபம் திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட இருக்கிறது என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. அதனைத்தொடர்ந்து பிப்ரவரி 2ம் தேதி டி.டி.எச்., மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இது குறித்து கமல் ஹாசன் அளித்த பேட்டியில் கூறியதாவது: வரும் 24ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விஸ்வரூபம் திரைப்படத்தின் சிறப்பு காட்சி, ஹாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்காக திரையிடப்படுகிறது. இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டு செல்கிறேன். ஹாலிவுட் நடிகர்களுக்கு விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடுவதை எண்ணுகையில் மகிழ்ச்சியாக உள்ளது. டி.டி. எச்.சில் படத்தை ஒளிபரப்புவது என்பது புதிய முயற்சி. திருட்டு வி.சி.டி மூலம் 50 சதவீதம் பணம் திருடப்படுகிறது. திருடர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது மோசமான செயல். டி.டி.எச்., பிரச்னையில் யாருக்கு வெற்றி, தோல்வி என்பது பிரச்னை இல்லை. டி.டி.எச்.சில் ஒளிபரப்பும் முயற்சி என்பது புதிய பாதை போன்றது. இது வெற்றி பெற்றால் சிறப்பான படங்கள் வெளிவரும். மேலும் டி.டி.எச்.சில் ஒளிபரப்பான முதல் தமிழ் படம் விஸ்வரூபம் என்கிற பெயரும் கிடைக்கும் என இவ்வாறு கமல் ஹாசன் தெரிவித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum