தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரையுலகில் புதுமை படப்பிடிப்பு ''கோமாலினி''

Go down

திரையுலகில் புதுமை படப்பிடிப்பு ''கோமாலினி'' Empty திரையுலகில் புதுமை படப்பிடிப்பு ''கோமாலினி''

Post  ishwarya Sat Mar 23, 2013 12:34 pm



கோமாலி பாரடைஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதுமையான படைப்புக்கு ''கோமாலினி'' என்று பெயரிட்டுள்ளது.

இதில் குறிப்பிட்ட நடிகர் நடிகைகள் யாரும் கிடையாது.

படப்பிடிப்பு சாதனங்கள் எதுவும் இல்லாமல் சாலைகளில் கடந்து போகின்றவர்களை எல்லாம் அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்து அதை திரைக்கதையாக்கி, கோர்வையாக்கி படமாக்கும் Hidden camera அதாவது காமிராவை மறைத்து வைத்து படமாக்கும் உத்தியில் படமாக்கிய படம்தான் ''கோமாலினி''. அதாவது காமிராவை மறைத்து வைத்து யதார்த்தமாக உலாவரும் கதாபாத்திரங்களையும், அதாவது மேக்கப், லைட்ஸ் எதுவுமின்றி எடுக்கப்பட்டது.

படம் கூறித்து இயக்குநர் அரசிடம் கேட்டபோது...

நாளைய இயக்குநர் குழுவில் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். ''அருவம்'' என்ற படத்தில் இணை இயக்குநராகவும், அனிமேசன் அமைப்பாளருமாக பணியாற்றி, பிரதாப்போத்தன், ஒவியர் மகன் வசந்த் ஆகியோரால் பாராட்டுப் பெற்றேன்.

''கோமாலின்'' திரைப்படத்தில் உண்மையான ஆவிகளுடன் பேசியும், படமாக்கியுள்ளோம். அவர்களுக்கு இதில் முக்கிய பங்கு அளித்துள்ளோம். காட்டுக்குள் வாழும் சித்தரர்கள், யோகிகள், நம்பூதிரிகள் மற்றும் மந்திரவாதிகள் வாழ்க்கையை தங்கள் கண்முன்னே படைக்க உள்ளோம். ஏறக்குறைய ஒரு வருடங்களாக படமாக்கி இருக்கிறோம்.

உலகில் இதுவரை Hidden camera வில் எந்த படமும் படமாக்கப் படவில்லை.

கோமாலினி படம் கதை திரைக்கதை, கிளைமாக்ஸ் எதுவும் இல்லாமல் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்று கூறினார்.

இசை: வேதச்சங்கர்

ஒளிப்பதிவு: ராஜேஷ்

பாடல்கள்: சிநேகன், கவின்பா

இயக்கம்: அரஸ் என்ற திருநாவுக்கரசு

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum