தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உதயம்-என்எச்4 படத்தில் சித்தார்த் புதிய அவதாரம்

Go down

உதயம்-என்எச்4 படத்தில் சித்தார்த் புதிய அவதாரம் Empty உதயம்-என்எச்4 படத்தில் சித்தார்த் புதிய அவதாரம்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:30 pm



கல்லூரி மாணவராக வந்து அழகான காதல் கதைகளில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த சித்தார்த், தற்போது உதயம் என்எச்4 படத்தின் மூலமாக புதிய அவதாரத்தை எடுத்துள்ளார்.

தயாநிதி அழகிரியின் மீகா என்டர்டெய்ன்மென்ட் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ் ரூட்ஸ் சினிமா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாயின.

இப்படத்தில் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்துள்ளது புதிய முகம் அஷ்ரிதா. இப்படத்துக்கு கேமராமேன் வேல்ராஜ், இசை ஜி.வி. பிரகாஷ். இப்படத்தில் வெற்றிமாறன் இணை தயாரிப்பாளராக மட்டும் அல்லாமல், படத்துக்கான திரைக்கதை மற்றும் வசனங்களையும் எழுதுகிறார். வெற்றிமாறனுக்கு மகிழ்ச்சி தரும் மற்றொரு விஷயமும் இப்படத்தில் உண்டு. அதாவது, வெற்றி மாறனுடன் 8ம் வகுப்பு முதல் ஒன்றாகப் படித்த நண்பர் மணிமாறன் இப்படத்தை இயக்குகிறார்.

படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டன. படத்துக்கான இசையை மார்ச் மாதம் வெளியிட தயாரிப்பு வட்டம் திட்டமிட்டுள்ளது. படம் ஜூன் மாதம் வெளியாகலாம். கடைசியில் தலைப்பையே மறந்துவிட்டோமே... இப்படத்தில் சித்தார்த் ஆக்சன் வேடத்தில் நடிக்கிறார். இதுவரை காதல் நாயகனாக இருந்தவர் இனி ஆக்சனிலும் ஒரு கலக்கு கலக்குவார் என்று தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum