ஆந்திரம், கர்நாடகத்தில் "விஸ்வரூபம்' திரையிடுவது நிறுத்திவைப்பு
Page 1 of 1
ஆந்திரம், கர்நாடகத்தில் "விஸ்வரூபம்' திரையிடுவது நிறுத்திவைப்பு
ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரையிடப்படுவதை போலீஸôர் தடுத்துவிட்டனர். ஆனால் கேரளத்தில் அத்திரைப்படம் எவ்விதப் பிரச்னையும் இன்றி திரையிடப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக படத்தை திரையிட அனுமதிக்கவில்லை என்று ஆந்திர போலீஸôர் விளக்கமளித்துள்ளனர். முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததே இதற்குக் காரணம்.
கர்நாடகத்தில் இத்திரைப்படத்தை ஞாயிற்றுக்கிழமை திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்குப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு போலீஸôர் கேட்டுக் கொண்டதை அடுத்து வெள்ளிக்கிழமை படத்தை திரையிடவில்லை என்று கர்நாடக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மொத்த மக்கள்தொகையில் 25 சதவீதம் பேர் முஸ்லிம்கள் உள்ள கேரளத்தில் 86 திரையரங்குகளில் விஸ்வரூபம் திரையிடப்பட்டது. அங்கு திரைப்படத்துக்கு எவ்வித எதிர்ப்பும் ஏற்படவில்லை.
ஆந்திரத்தில் சில முஸ்லிம் அமைப்புகள் இப்படத்தை நமது மாநிலத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று காவல் துறை உயரதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து ஹைதராபாத், சைபராபாத் நகர போலீஸ் கமிஷனர்கள் அந்த மாநில உள்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியிடம், இத்திரைப்படம் திரையிடப்படுவதை நிறுத்தி வைக்கும் அதிகாரத்தை கேட்டுப் பெற்றனர். அதே நேரத்தில் மாநில அரசுத் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
விஸ்வரூபத்துக்கு கேரள மார்க்சிஸ்ட் ஆதரவு: விஸ்வரூபம் திரைப்படத்துக்கு எதிரான போராட்டம் தேவையற்றது என்று கேரள மாநில மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பினரயி விஜயன் கூறியுள்ளார்.
கமல் ஹாசன் எப்போதுமே மதச்சார்பின்மைக்கும், மனித உணர்வுகளுக்கும் ஆதரவாக இருப்பவர். சமூகத்தின் எந்தப் பிரிவையும் விமர்சிக்கும் வகையில் அவர் செயல்பட மாட்டார்.
இத்திரைப்படத்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவது உள்நோக்கம் உடையது. எனவே அவரது திரைப்படத்தை எதிர்த்து போராடுபவர்கள் அதனைக் கை விட்டு, அதனை நீதிமன்ற முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்!
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்
» விஸ்வரூபம்
» விஸ்வரூபம்
» பிரெஞ்சில் விஸ்வரூபம்
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்
» விஸ்வரூபம்
» விஸ்வரூபம்
» பிரெஞ்சில் விஸ்வரூபம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum