தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெள்ளித்திரையில் மென் பனிச் சாரல்

Go down

வெள்ளித்திரையில் மென் பனிச் சாரல் Empty வெள்ளித்திரையில் மென் பனிச் சாரல்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:14 pm



வெள்ளித்திரையில் 'பனி விழும் மலர்வனம்'. தலைப்பைப் போலவே காட்சிகளும் கவித்துவமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள படம். மனதுக்கும் உடலுக்கும் இதமான தேனி மாவட்டத்தை அண்டிய தேக்கடி, குமுளி ஆகிய மலைப்பகுதிகளில் படமாகிறது.

இயற்கையே அழகு! அதுவே ஆபத்து! நிறைந்தது என்ற புதுமையான கருவை அடிப்படையாகக் கொண்டு 'பனி விழும் மலர்வனம்' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இயற்கை எழிலைக் கண்ணுக்கு விருந்தாக்கி ஒரு சிறந்த படைப்பைக் கொண்டுவர மலைகளின் மேடு பள்ளங்களில் அட்டைகளும் மற்ற இயற்கை உயிரினங்களும் தந்த வலியைப் பொருட்படுத்தாமல், கடினமாக உழைத்திருக்கிறார்கள் படக் குழுவினர்.

ஜேம்ஸ் டேவிட் இந்தப் படத்தை இயக்குகிறார். ஜீவா நடித்த ராமேஸ்வரம், ஜித்தன் ரமேஷ நடித்த நீ வேணுண்டா செல்லம் ஆகிய படங்களில் பணியாற்றியவர் இவர். சுள்ளான், மனதோடு மழைக்காலம், ஜனனம் ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் ராகன் இந்தப் படத்தின் காட்சிகளைப் படம்பிடிக்கிறார். தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு பொருள் கொடுத்த இயக்குநர் ஷங்கருடன் நண்பன், ஐ படத்தில் பணியாற்றிய டி. முத்துராஜ் இந்தப் படத்தின் கலை இயக்குநர். விருதுகளைக் குவித்த படங்களான அங்காடி தெரு, பழசி ராஜா மற்றும் மட்டற்ற நகைச்சுவையை வழங்கிய இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய படஙளுக்கும் கலை இயக்குநர் இவரே. ரஜின் இசையமைக்க ரவிஷங்கர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

சிடிஎன் ப்ரொடக்ஷன்ஸ் (CTN Production )என்று அழைக்கபப்டும் கம்பைன்ட் டேலன்டட் நெட்வொர்க் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இந்தப் படம் உருவாகிவருகிறது.

நீதானே என் பொன் வசந்தத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த‌ அபிலாஷ் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார். ஒருவர் மீது இருவர் சாய்ந்து என்ற படத்தில் நடித்த சாய்னாதான் நாயகி. பேராண்மையில் ஐந்து பெண்களில் ஒருவராக அறிமுகமாகி அணமையில் வெளியான நீர்ப்பறவையில் கவனிக்க வைத்த வர்ஷா மற்றொரு நாயகி. இவர் தற்போது தயராகிவரும் அமைதிப்படை 2 படத்திலும் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களைச் சிரிக்க வைக்கும் பொறுப்பை நகைச்சுவை நடிகர் பாபா லக்ஷ்மண் ஏற்றிருக்கிறார். இயக்குநர் ஜெகனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கண்கவரும் இடங்களில், தேர்ந்த நடிகர்கள் மற்றும் திறமையான தொழிநுட்பக் கலைஞர்களைக் கொண்டு தயாராகிவரும் பனிவிழும் மலர்வனம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைவதோடு, இத் திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகள்,இந்தியாவின் Incredible India விற்கு ஆவணப்படுத்தக் கூடிய திரைப்படமாக இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum