தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பத்மபூஷண் விருதை நிராகரித்தார் ஜானகி

Go down

பத்மபூஷண் விருதை நிராகரித்தார் ஜானகி Empty பத்மபூஷண் விருதை நிராகரித்தார் ஜானகி

Post  ishwarya Sat Mar 23, 2013 12:14 pm



பத்ம பூஷண் விருதை தான் ஏற்கப் போவதில்லை என்று பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி அறிவித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் ஈடுபட்டுள்ள தமக்கு மிகவும் கால தாமதமாக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்விருதை ஏற்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

""பத்ம விருதை ஏற்கப் போவதில்லை. கடந்த 55 ஆண்டுகளாக திரைப்படப் பாடல்களைப் பாடி வருகிறேன். பல்வேறு மொழிகளைச் சேர்ந்த ரசிகர்கள் அளிக்கும் ஆதரவுதான் எனக்குக் கிடைத்த மிக உயரிய விருதாகக் கருதுகிறேன். இருப்பினும் அரசு மீது எவ்வித வெறுப்பும் கிடையாது,'' என்று ஜானகி தெரிவித்துள்ளார்.

75 வயதாகும் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

""இதுவரையில் அரசிடமிருந்து எவ்வித பாராட்டும் கிடைத்ததில்லை. இதனால் அரசு எனக்கு எதுவும் செய்யவில்லை எனக் கருதவில்லை. இருப்பினும் பத்ம விருதை ஏற்பதில்லை என முடிவுசெய்துள்ளேன்,'' என அவர் தெரிவித்துள்ளார். ஒற்றப்பாலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

இதுவரை நான்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ள ஜானகியின் பெயர் பத்மபூஷண் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு 108 பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து ஜானகியின் மகன் முரளி, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் கூறியது: இவ்விருதுக்கு எனது தாயின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் காலம் தாழ்த்தி கிடைக்கும் விருது. இது முன்னரே கிடைத்திருக்க வேண்டும். இதை ஏற்பதில்லை என்பதை முறைப்படி அரசுக்கு தெரிவிப்பார் என்று அவர் கூறினார்.

விருதுக்கு தனது தாயின் பெயர் தேர்வு செய்யப்பட்டது குறித்து அரசிடமிருந்து எவ்வித தகவலும் இதுவரை வரவில்லை. சிலர் கூறியதிலிருந்துதான் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது தெரியவந்ததாக அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum