ஆதி பகவன் திரைப்படம்: காவல் ஆணையரிடம் வழக்குரைஞர்கள் மனு
Page 1 of 1
ஆதி பகவன் திரைப்படம்: காவல் ஆணையரிடம் வழக்குரைஞர்கள் மனு
அமீர் இயக்கி விரைவில் வெளிவரவுள்ள ஆதிபகவன் திரைப்படத்தில் இந்து கடவுள்கள் பற்றி அவதூறான காட்சி இருப்பதாக தகவல் வெளி வருவதால், அப் படத்தை இந்து அமைப்பினருக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும் என உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எம்.துரைசெல்வன் ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு கொடுத்தனர்.
அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: திரைப்பட இயக்குநர் அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ஆதிபகவன் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. ஆதிபகவன் என்பது இந்துக்களின் முழு முதற் கடவுள்களான சிவனையும், விநாயகரையும் குறிப்பதாகும். எனவே இந்த திரைப்படத்தின் பெயரை மாற்றுவது நல்லது.
மேலும் இந்த திரைப்படத்தில் இந்துக்களையும், இந்து கடவுள்களையும், இந்து மத நம்பிக்கையையும் அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றன. எனவே இந்தப் படத்தை திரையிடுவதற்கு முன்பு, படத்தை இந்து இயக்கங்களின் நிர்வாகிகளுக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும். அவர்களின் அனுமதியை பெற்ற பின்னரே படத்தை திரையிட வேண்டும்.
இந்துக்களின் கடவுள் பெயர் கொண்ட ராம் திரைப்படத்தை இயக்கி வெளியிட்ட அமீர், அந்தப் திரைப்படத்தில் கதாநாயகனை மனநிலை பாதித்தவராகக் காட்டினார். இதனால் பல இந்துக்களின் மனம் புண்பட்டது. எனவே, அப்படியொரு நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கும், எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்கும் ஆதிபகவன் திரைப்படத்தை இந்து அமைப்புகளின் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இணையதளம் மூலம் ஆபாச தகவல்கள்: காவல் ஆணையரிடம் பாடகி சின்மயி புகார்
» 'ஆண்டவ பெருமாள்' தலைப்புக்கு எதிர்ப்பு: சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு
» ஆதி,பகவன்: ஏ சான்றிதழ் ஏன்?
» அமீரின் ஆதி-பகவன்
» ஆதி பகவன், கடவுளல்ல கதாபாத்திரம்
» 'ஆண்டவ பெருமாள்' தலைப்புக்கு எதிர்ப்பு: சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு
» ஆதி,பகவன்: ஏ சான்றிதழ் ஏன்?
» அமீரின் ஆதி-பகவன்
» ஆதி பகவன், கடவுளல்ல கதாபாத்திரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum