வன யுத்தம் படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் அனுமதி
Page 1 of 1
வன யுத்தம் படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் அனுமதி
வன யுத்தம் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வன யுத்தம் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம் வனயுத்தம் திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.
இந்த தடையை ரத்து செய்யக் கோரி படத்தின் இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் விசாரணை நடத்தினார். மனுதாரர் தரப்பு மூத்த வழக்குரைஞர் ஏ. நடராஜன், சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கி விடுவதாக உறுதிமொழி அளித்தார். இதையடுத்து, அந்தப் படத்தை திரையிடஅனுமதி அளித்து வெள்ளிக்கிழமை நீதிபதி உத்தரவிட்டார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரசாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது: உயர் நீதிமன்றம்
» பிரசாந்த் – கிரகலட்சுமி திருமணமே செல்லாது! – உயர் நீதிமன்றம்
» வனிதாவை 3-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது! – உயர் நீதிமன்றம்
» விஸ்வரூபம் படத்தை வெளியிட தடையில்லை
» விஸ்வரூபம் படத்தை வெளியிட முடியாது
» பிரசாந்த் – கிரகலட்சுமி திருமணமே செல்லாது! – உயர் நீதிமன்றம்
» வனிதாவை 3-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது! – உயர் நீதிமன்றம்
» விஸ்வரூபம் படத்தை வெளியிட தடையில்லை
» விஸ்வரூபம் படத்தை வெளியிட முடியாது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum