தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேயாரை எதிர்த்து மீண்டும் போட்டியிடுவேன்: எஸ்.ஏ.சந்திரசேகரன்

Go down

கேயாரை எதிர்த்து மீண்டும் போட்டியிடுவேன்: எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty கேயாரை எதிர்த்து மீண்டும் போட்டியிடுவேன்: எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post  ishwarya Sat Mar 23, 2013 11:39 am



அடுத்த தேர்தலை சந்திக்கும் சூழல் வந்தால் கேயாரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என தயாரிப்பாளர் சங்கத் தலைவராக உள்ள எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 700-க்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் என் தலைமையிலான குழுவுக்கு சுமார் 400 வாக்குகளும், எதிர்த்து நின்ற கேயார் தரப்புக்கு 300 வாக்குகளும் கிடைத்தன.

முறைப்படியாக நடந்த தேர்தலின் மூலம் கேயார் தலைமையிலான குழு தோல்வி அடைந்த குழுவாகும். அந்தக் குழுவுக்கு சாதகமாக இருந்து வரும் 200-க்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொண்ட பொதுக் குழு தேர்தலில் எனக்கு எதிராக வாக்களித்து உள்ளார்கள்.

இது எப்படி சட்டப்படி செல்லும். இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு என் தலைமையிலான நிர்வாகக் குழு பல நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறது. தீபாவளி, பொங்கல் காலங்களில் பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். சங்கத்தின் நிதியை ஒருபோதும் தவறாக செலவு செய்யவில்லை.

தனக்கு 204 வாக்குகளும், எனக்கு 10 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளதாக கூறி கேயார் என்னை சிறுமைப்படுத்தி விட்டார். இன்னும் ஒரு மாதத்தில் பொதுக்குழுவை கூட்டி முறைப்படியான தேர்தலை அறிவிப்போம். அந்தச் சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக கேயாரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்றார்.

தயாரிப்பாளர் சங்கச் செயலாளராக இருந்து வரும் பி.எல்.தேனப்பன், பொருளாளராக இருந்து வரும் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் உடனிருந்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ராவணன் படத்தை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
» மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவேன்- கமல் மீண்டும் பேச்சு
» சாராய சந்தேகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன்
» மீண்டும் எஸ்எம்எஸ் தொல்லை – போலீஸில் மீண்டும் சினேகா புகார்!
» ‘சமர்’ தலைப்பை பயன்படுத்தக்கூடாது: விஷால் படத்தை எதிர்த்து வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum