பொடுகு நீங்க
Page 1 of 1
பொடுகு நீங்க
தேவையானப் பொருட்கள்:
நல்லெண்ணெய்.
தேங்காய் எண்ணெய்.
நெல்லிக்காய் பொடி.
தான்றிக்காய் பொடி.
மருதாணி பொடி.
கறிவேப்பிலை பொடி.
கரிசலாங்கண்ணி பொடி.
வெட்டிவேர்.
ரோஜா இதழ்கள்.
சந்தன பொடி.
செய்முறை:
ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில் அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum