தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழைவிட தெலுங்கு திரையுலகமே மேலானது: காஜல் அகர்வால்

Go down

தமிழைவிட தெலுங்கு திரையுலகமே மேலானது: காஜல் அகர்வால் Empty தமிழைவிட தெலுங்கு திரையுலகமே மேலானது: காஜல் அகர்வால்

Post  ishwarya Fri Mar 22, 2013 6:02 pm

தமிழைவிட தெலுங்கு திரையுலகமே மேலானது என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். அண்மையில் இவரது நடிப்பில் தமிழில் வெளியான துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. தற்போது கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடிக்கிறார்.

இது குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை இரண்டிற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. நான் தமிழைவிட தெலுங்கு திரையுலகிற்குதான் முன்னுரிமை அளிக்கிறேன். ஏனென்றால் அங்குதான் நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழ் திரையுலகில் நடிகைகளுக்கு மரியாதை இல்லை. இங்கு கதாநாயகர்களுக்குதான் முக்கியத்துவம் அளிக்கின்றனர். நான் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்தது இனிய அனுபவம். அதேசமயம் என்னுடன் நடிக்கும் கதாநாயர்களுடன் நட்பு ரீதியிலேயே பழகுகிறேன். நட்பு எல்லையை தாண்டமாட்டேன் என இவ்வாறு தெரிவித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum