தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தொலைக்காட்சி நடிகரை மணக்கிறார் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா

Go down

தொலைக்காட்சி நடிகரை மணக்கிறார் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா Empty தொலைக்காட்சி நடிகரை மணக்கிறார் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா

Post  ishwarya Fri Mar 22, 2013 5:57 pm



பாலிவுட்டின் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா விரைவில் திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2000ம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டின் பிரபல நடிகையான இவருக்கு தற்போது 30 வயதாகிறது. இந்நிலையில் பிரியங்கா, மொகித் ரெய்னா என்கிற தொலைக்காட்சி நடிகரை மணக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியில் பிரபல தொலைக்காட்சி நடிகரான மொகித் பல புராண தொடர்களில் நடித்துள்ளார். மகாதேவ் தொடரில் சிவனாக நடித்து அனைவர் மனதிலும் இடம்பெற்றவர். மொகித்தை திருமணம் செய்ய பிரியங்கா தரப்பிலிருந்து சம்மதம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கைவசமுள்ள 5 படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு திருமணம் செய்துகொள்ளப் போகிறாராம் பிரியங்கா.

பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையான பிரியங்கா தொலைக்காட்சி நடிகரை மணந்து கொள்ள சம்மதித்திருப்பது பாலிவுட்டில் பெரும் ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum