வாழை சாகுபடி டிப்ஸ் – II
Page 1 of 1
வாழை சாகுபடி டிப்ஸ் – II
- பழுக்காத வாழை இலையை
பெரிய கலனில் / பாத்திரத்தில் இட்டு, ஊதுபத்தி கொளுத்தி அதன் மூடியை
போட்டுவிட்டால், 12 மணி நேரத்திற்குள் பழுத்துவிடும். - விரைவில் வாழைக் குலையை பழுக்க வைக்க, சுண்ணாம்பு கரைசலை அதன் மீது தெளித்தால் போதும்.
- இலகுவாக பழுக்க வைக்க, குலைகளில் ஆங்காங்கு வேப்பிலையைச் சொருகினால் போதுமே.
- 25 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு
கலந்து கலவையை ஒவ்வொரு மரத்தை நட்ட 6ம் நாளில் சுற்றிலும் இட்டால்
பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும். - இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, நீர்த்த புகையிலை கரைசலை தெளிக்கலாம்.
- அரை அடி உயரமுள்ள இரண்டரை கிலோ எடையுள்ள கிழங்கை விதைக்க பயன்படுத்தவேண்டும்.
- கிழங்கு அழுகல் நோயை தடுக்க, வாழைக் கிழங்கை 100 லிட்டர்
தண்ணீரில் 1 லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்த கரைசலில் மூழ்கவைத்து பின்
நடவு செய்யப்பயன்படுத்த வேண்டும். - கடலை புண்ணாக்கு இட்டால் வாழையை அதிக மகசூல் கிடைக்கும்.
- வாழைக் குலையைச் சேமிக்கும் போது, ஏற்படும் வாழைப்பழ அழுகலை
கட்டுப்படுத்த, வாழைக் குலை காம்பை 10 % துளசி இலைச்சாறு கரைசலிலோ
1% வேப்ப எண்ணெய் கரைசலிலோ நனைத்து பின் சேமிக்கவேண்டும். - செண்டு மல்லியை வாழைத் தோட்டத்தைச் சுற்றி நட்டால் அது காற்று
தடுப்பானாக செயல்பட்டு, காற்றினால் ஏற்படும் சேதாரத்தை தடுக்கும். - சித்தகத்தி மரத்தை வாழைத் தோட்டத்தைச் சுற்றி நட்டால் அது
காற்று தடுப்பானால் செயல்பட்டு, காற்றினால் ஏற்படும் சேதாரத்தைத்
தடுக்கும். - வாழை சீப்பு உள்ள கலனில் வேப்பிலையை இட்டால், 4 நாட்களில் பழுத்துவிடும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாழை சாகுபடி டிப்ஸ்
» திசு வாழை சாகுபடி
» திசு வாழை சாகுபடி
» வாழை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
» வாழை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
» திசு வாழை சாகுபடி
» திசு வாழை சாகுபடி
» வாழை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
» வாழை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum