தீய சக்திகளை சாம்பலாக்கும் கொல்லிப்பாவை
Page 1 of 1
தீய சக்திகளை சாம்பலாக்கும் கொல்லிப்பாவை
எட்டுக்கை காளியம்மன் என்று போற்றப்படும் கொல்லிப்பாவையின் திருக்கோயில்,
அடர்ந்த மரங்கள் நிறைந்த மலைப்பகுதியில் உள்ளது. மலைமே லுள்ள இக்கோயிலைச்
சுற்றி மூலிகைச் செடிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. கோயிலுக்குச் செல்லும்
வழியில் சமணர் ஒருவரின் சிலை ஒன்று திறந்தவெளியில் மரத்தடியில் காட்சி
தருகிறது. அந்தச் சிலை மகாவீரருடையது என்று சொல்கிறார்கள். ஒரு
காலகட்டத்தில் கொல்லிமலை சமணர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. அதன்
அடையாளமாகத்தான் சமணரின் திருவுருவம் மரத்தினடியில் உள்ள தாக
கூறுகிறார்கள். இந்த இடத்திலிருந்து மேல்நோக்கி மேற்குப் பகுதியில்
சென்றால் சுமார் 3 கி.மீ. தூரத்தில் சமணர்கள் நிறுவிய ஆலயத்தையும்
தரிசிக்கலாம்.
ஆனால், அந்தப் பாதை மிகவும் ஆபத்தான ஒற்றையடிப்
பாதையாக இருப்பதாலும் கோயில் மிகவும் சிதிலமடைந்திருப்பதாலும் பெ
ரும்பாலோர் அங்கு செல்வதில்லை. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அங்கு வாழும்
மலைவாழ் மக்களின் உதவியுடன் செல்வார்களாம். மகாவீரரை தரிசித்தபின், சிறிது
தூரம் நடந்தால் எட்டுக்கை காளியம்மன் என்று போற்றப்படும் கொல்லிப்பாவை
கோயிலை அடையலாம். கொல்லிப் பாவை எழுந்தருளியிருக்கும் புனிதமான இடம் தென்னை
ஓலையால் வேயப்பட்ட குடிசையாகும். அந்தக் குடிசை அம்மனை எல்லா
காலங்களிலும் தரிசிக்க ஏதுவாக கதவுகள் இல்லாமல் இருக்கிறது. வடக்கு நோக்கி
அருள்புரியும் கொல்லிப்பாவை எப்பொழுதும் சந்தனக் காப்பில்தான் காட்சி
தருவா ளாம். அதனால் கொல்லிப்பாவையின் எட்டுக் கைகளையும் முழுமையாக தரிசிக்க
முடியாமல் போகிறது.
காலை எட்டு மணியளவில் அரிய மூலிகைச் சாற்றில்
அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது திரையிட்டு மூடிவிடுகிறார்கள். பக்தர்கள்
யாரும் அபி ஷேகத்தை தரிசிக்க முடியாது. கோயில் பூசாரி அபிஷேகம் செய்து
சந்தனக்காப்பிட்டு அலங்காரம் செய்தபின் வாசலில் போடப்பட்டுள்ள திரை விலக்
கப்படுகிறது. அதற்குப்பின் ஆராதனைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள்
கொண்டுவந்திருக்கும் மலர்கள், எலுமிச்சம்பழ மாலை ஆகியவைகள் அம்மனுக்கு
அணிவிக்கப்படுகின்றன. இங்கு பலவகையான பழங்களுடன் தேனும் கிடைப்பதால்
சித்தர்களும் முனிவர்களும் அங்கு பர்ணசாலையிலும் குகைக்குள்ளும்
தங்கியிருக்கிறார்கள்.
அந்த வேளையில் அசுரர் கூட்டம் அங்கு வந்து
தவத்திற்கு இடையூறு செய்யவே, முனிவர்கள் அந்த அசுரர்கள் வரும் வழியில்
அழகிய பெண் (பாவை) உருவத்தினை செய்து வைத்ததுடன், விஸ்வகர்மாவை அழைத்து
அந்தப் பாவைக்கு மயக்கும் சக்திகள் ஊட்டும்படி கூற, விஸ்வகர்மா, அந்
தப்பாவை சிலைக்கு அசுரர்களின் வாடை பட்டவுடன் நகைக்கும் திறமையும்,
காண்போரின் உள்ளத்தைக் கவர்ந்து அருகே ஈர்க்கும் கவர்ச்சியையும்
அளித்தார். அந்தப் பாவையின் சிரிப்பிலும் கண் சிமிட்டலிலும் அழகிலும்
மயங்கி அதன் அருகில் சென்ற அசுரர்களைக் கொன்று இருக்குமிடம் தெரி யாமல்
பஸ்மமாக்கிவிடுமாம் இந்த அதிசயப் பாவை சிலை. அன்று இந்த மலைப்பகுதியில் பல
இடங்களில் இச்சிலைகள் இருந்ததாகவும் அசுரர்களின் தொல்லைகள் நீங்கி இந்தப்
பகுதி அமைதியானதும் அந்தப் பாவை சிலைகள் அகற்றப்பட்டன என்றும்
கூறுகிறார்கள்.
குடிசைக்குள் சுமார் ஐந்தடி உயரத்தில் குடி
கொண்டிருக்கும் கொல்லிப்பாவை என்னும் எட்டுக் கைகள் கொண்ட அம்மனுக்கு
அபிஷேகம் முடிந்ததும் முழுமையாக சந்தனக்காப்பு இட்டபின், பக்தர்கள்
வழிபட்டதும் பூசாரியிடம் குறி கேட்பதற்கு பலர் காத்திருக்கிறார்கள். பூசாரி
கொல்லிப்பாவையை சுற்றிச் சுற்றி வந்து ஆவேசமாக ஆடுகிறார். பிறகு
சூடத்தைக் கொளுத்தி தீபாராதனை காட்டுகிறார். பின்னர் மூன்று அங்குலம்
உயரமுள்ள கூர்மை யான ஆணிகள் பதித்திருக்கும் இரும்பு பாதக்குறடுகள்(காலணி)
மீது ஏறி நின்று குறி கேட்பவர்களுக்கு அருள்வாக்கு சொல்கிறார். பிறகு
ஆவேசம் தணிந்து அரைமணி நேரம் கழித்து அனைவருக்கும் பிரசாதமாக திருநீறு
வழங்குகிறார்.
கொல்லிமலையில் பல அரிய மூலிகைகள் உள்ளதால் சித்த
மருத்துவர்கள் இந்த மலைக்கு குறிப்பிட்ட நாட்களில் வருவார்களாம். அவர்கள்
முதலில் இந்தப் பாவையிடம் அனுமதி பெற்று மந்திரம் சொல்லி அதன் பின்,
மூலிகைகளை பறிப்பார்கள். அதை முதலில் பாவை சந்நதியில் வைத்து பூஜித்து
எடுத்துச் செல்வது வழக்கமாம். அப்போதுதான் மூலிகைகளின் முழுசக்தியும்
கிட்டும் என்று சொல்லப்படுகிறது. ஆடி மாதம் முழுவதும் இங்கு சிறப்பு
வழிபாடுகள் நடைபெறும். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவு வந்து
அம்மனை தரிசித்து பலன் பெறுகிறார்கள். மேலும் கொல்லிமலைக்கு சுற்றுலா
வரும் அன்பர்களும் அறப்பளீஸ்வரரை தரிசித்த பின் இந்த அம்மனையும் தரிசித்து
பயன் பெறுகிறார்கள்.
இயற்கை சூழ்நிலையில் கொல்லிப்பாவை அம்மனை
தரிசிக்கும்போது மனம் மகிழ்கிறது. மீண்டும் ஒரு தடவை இக்கோயிலுக்கு வர
வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதிக்கிறது. கொல்லி மலைக்கு
சேலத்திலிருந்தும் நாமக்கல்லிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. மலையின்
மீது தங்குவதற்கு விடுதிகள் உண்டு. நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து
கொல்லிமலைமேலுள்ள அறப்பளீஸ்வரர் திருக்கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதிகள்
உள்ளன. போகும் வழியில் எட் டுக்கை காளியம்மன் கோயில் நிறுத்தத்திலிருந்து 2
கி.மீ. தூரத்தில் கொல்லிப்பாவை அம்மன் கோயில் உள்ளது. சிறிய வாகனங்களில்
செல்பவர்கள் கோயிலுக்கு ஒரு கி.மீ. தூரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு,
அங்கிருந்து கரடுமுரடான, ஏற்ற-இறக்கமுள்ள பாதையில் நடந்து சென்றால் பதி
னைந்து நிமிடங்களில் கோயிலை அடையலாம்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum