நெல்லில் செம்பேன் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு
Page 1 of 1
நெல்லில் செம்பேன் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு
தற்போது பயிரிடப்பட்டுவரும் பல்வேறு ரக நெற்பயிர்களில் செம்பேன் தாக்குதல் அதிகம் தென்பட்டு வருகிறது.
இச்செம்பேன்கள் கண்களுக்கு தெளிவாகப் புலப்படாது. ஒரு மி.மீ. அளவிற்கும் சிறியவை. சாதாரண கை உருப்பெருக்கிகள் கொண்டுதான் நன்றாக பார்க்க முடியும்.
எட்டுக்கால்களைக் கொண்ட சிலந்திவகையைச் சேர்ந்த இந்த நுண்ணிய செம்பேன்கள் நெற்பயிரில் இலைகளின் அடிப்புறத்தில் இருந்து சாற்றை உறிஞ்சுவதால் இலைகளின் மேற்பரப்பில் பழுப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் புள்ளிகளும் மெல்லிய வரிகளும் ஏற்பட்டு நாளடைவில் இலைகள் வெளிறி கருகிவிடும்.
அதிக எண்ணிக்கையில் பெருகும்போது இலையின் மேற்பரப்பிற்கும் வந்து சாற்றை உறிஞ்சி மிகுந்த அளவில் சேதம் ஏற்படுத்துகிறது.
நாற்றங்கால்களிலும் நடவு வயலிலும் இதன் பாதிப்பால் 25 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
வெப்பமான மழைக் காலத்தை ஒட்டி இதன் தாக்குதல் அதிகம் தென்படும்.
தாய்ச்செம்பேன்கள் தனித்தனி முட்டைகளை இலைகளின் நடுநரம்புகளை ஒட்டி இருபுறங்களிலும் இடுகின்றன.
மென்மையான பட்டு இழைகள் போல் வலைகள் பின்னி 200 முட்டைகள் வரை இடுகின்றன.
குஞ்சுகள் 6 கால்களுடன் இளம்பழுப்பு நிறத்திலும் முதிர்ந்த செம்பேன்கள் 8 கால்களுடன் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் காணப்படும்.
தாய்செம்பேன்கள் 21 நாட்கள் வரை உயிர்வாழும். உடம்பின் இரு ஓரங்களிலும் சிறு கருப்பு புள்ளிகளுடன் காணப்படும்.
செம்பேன் பரவ காரணங்கள்
வயற்பரப்பில் அதிகமான ஈரப்பதமும் வெப்பமும் இருத்தல்,
நெருக்கமான நடவு,
போதுமான காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் இல்லாதது,
களைகள் மண்டிக் கிடப்பது,
தேவையில்லாமலும் தேவைக்கு அதிகமாகவும் விஷப்பூச்சி மருந்துகளைத் தெளித்து இயற்கை எதிரிகளை அழிப்பது போன்றவை இந்த நெற்செம்பேன்களின் அதிவேகமான இனப்பெருக்கத்திற்கு முக்கிய காரணங்களாகும்.
கட்டுபடுத்தும் முறைகள்
சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற பூஞ்சாணத்தை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பதால் செம்பேன் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
வயலில் களைகளை அகற்ற வேண்டும்.
செம்பேன்கள் பாதித்த பாகங்களை சேகரித்து அழித்தல் வேண்டும்.
எதிர்ப்புத்திறன் உள்ள நெல் ரகங்களைக் கண்டறிந்து பயிர்செய்ய வேண்டும்.
தழைச்சத்து அதிகம் இடுவதைத் தவிர்க்கவும்.
தழைச்சத்தை யூரியா வடிவில் வேப்பம் புண்ணாக்குடன் 5:1 என்ற விகிதத்தில் கலந்து இடவேண்டும்.
தொடர்ந்து நெல் சாகுபடி செய்யாமல் பயிர் சுழற்சி முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
செம்மை நெல் சாகுபடி முறைகளைப் பின்பற்றும்போது பொதுவாக செம்பேன் மற்றும் இதர பூச்சிகளின் தாக்குதல் மிகக்குறைவாக உள்ளது.
செம்பேன்களின் எண்ணிக்கை இலைக்கு 10 என்று மிகும்பொழுது நனையும் கந்தகம் 80 சதம் @ 6.25 கிராம்/ லி, புரபெனோபாஸ் @ 2மிலி/லி, ஸ்பைரோமெசிபென் @ 0.75 மிலி/லி அல்லது 3 சத வேப்பெண்ணெய் கரைசல், 5 சதம் வேப்பம் பருப்புச்சாறு போன்றவற்றைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
பூச்சி மருந்து தெளிக்கும்போது தவறாது ஒட்டும் திரவம் 0.5 மிலி/லி என்ற அளவில் சேர்க்க வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெல்லில் கூடுதல் லாபம் தர “பின்செய்நேர்த்தி’
» நெல்லில் கூடுதல் லாபம் தர “பின்செய்நேர்த்தி’
» நெல்லில் கூடுதல் லாபம் தர “பின்செய்நேர்த்தி’
» மானாவாரி நெற்பயிருக்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை
» நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
» நெல்லில் கூடுதல் லாபம் தர “பின்செய்நேர்த்தி’
» நெல்லில் கூடுதல் லாபம் தர “பின்செய்நேர்த்தி’
» மானாவாரி நெற்பயிருக்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை
» நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum