நெல் சாகுபடியில் உர மேலாண்மை
Page 1 of 1
நெல் சாகுபடியில் உர மேலாண்மை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடப்பு கார் மற்றும் முன் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் நேரடி உரங்கள் மற்றும் கூட்டு உரங்களை பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெறலாம், என்று வேளாண் இணை இயக்குனர் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
நெல் நடவின் போது நெல் பயிருக்கு மண் ஆய்வு முடிவு மண் வள அட்டை பரிந்துரை படி உரமிடவேண்டும். இதனால் உரச்செலவினங்கள் குறைவதுடன் தேவையற்ற கூடுதல் உரச்செலவினத்தையும் தவிர்க்கலாம்.
மண் ஆய்வு மேற்கொள்ளப்படாத பட்சத்தில் பொது பரிந்துரையாக ஏக்கருக்கு, 60 சதவீத தழை, 20 சதவீத மணி, 20 சதவீத சாம்பல் சத்து தரவல்ல நேரடி உரங்களை இடுதல் அவசியமாகும்.
மேலும், நெல் பயிருக்கு உரத்தினை பிரித்து இடுவதால் உரங்கள் விரயம் ஆவது தவிர்க்கப்படுகிறது.
இதன் படி அடிஉரமாக 30 சதவீத தழை, 20 சதவீத மணி, 10 சதவீத சாம்பல் சத்து உரங்களை இடவேண்டும்.
நடவு நட்டு 21வது நாளில் 10 சதவீத தழை, 5 சதவீத சாம்பல் சத்து உள்ள உரங்களை இடவேண்டும்.
இதே போல் கதிர் உருவாகும் பருவத்திலும், பூ பூக்கும் பருவத்திலும் 10 சதவீத தழை, 5 சதவீத சாம்பல் சத்து தரவல்ல உரங்களை இடவேண்டும்.
இவ்வாறு நெல் பயிருக்கு உரங்களை பிரித்து இடுவதன் மூலம் பருவத்திற்கு ஏற்ப உரச்சத்து பயிருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் தேவைக்கு மேல் உரத்தினை விரயம் ஆவதை தடுக்கலாம்.
மேலும், ஏக்கருக்கு நேரடி உரங்களை நெல் பயிருக்கு இடும்போது பொது சிபாரிசுபடி யூரியா 132 கிலோ, இவற்றில் அடி உரமாக 66 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோவும், பொட்டாஷ் 33 கிலோவில் 17 கிலோ அடிஉரமாகவும் இடவேண்டும்.
நேரடி உரங்கள் பயன்படுத்தாத போது ஏக்கருக்கு கூட்டு உரம் பயன்படுத்தும் பட்சத்தில் பொது சிபாரிசாக 100 கிலோ கூட்டு உரத்துடன் 97 யூரியா இட வேண்டும்.
இதில் அடி உரமாக ஏக்கருக்கு 100 கிலோ கூட்டு உரமும் 31 கிலோ யூரியாவும் இடவேண்டும். கூட்டு உரம் பயன்படுத்தும் போது, பொது சிபாரிசாக 100 கிலோவுடன் 88 கிலோ யூரியாவை சேர்த்து பயன்படுத்த வேண்டும். இதில் அடி உரமாக ஏக்கருக்கு 100 கிலோ கூட்டு உரத்துடன் 22 கிலோ யூரியாவை கலந்து இடவேண்டும்.
டி.ஏ.பி., கூட்டு உரத்தினை பயன்படுத்தும் போது ஏக்கருக்கு பொது சிபாரிசாக 43 கிலோவுடன் 114 கிலோ யூரியாவை சேர்த்து இட வேண்டும். இதில் அடி உரமாக ஏக்கருக்கு 43 கிலோ டி.ஏ.பி., கூட்டு உரத்துடன் 26 கிலோ யூரியாவை இட வேண்டும். கூட்டு உரத்துடன் ஏக்கருக்கு 17 கிலோ பொட்டாஷ் உரத்தினை அடி உரமாக சேர்த்து இட வேண்டும்
எனவே விவசாயிகள் நெல் பயிருக்கு நேரடி உரங்களான யூரியா , சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களை பயன்படுத்துவது நல்லது.
நேரடி உரங்கள் பயன்படுத்தாத போது கூட்டு உரங்களை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறலாம்.
மேலும் விவரங்களை விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் துறை அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெல் சாகுபடியில் குலை நோய்
» நெல் சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
» திருந்திய நெல் சாகுபடியில் நாற்று நடவு நுட்பங்கள்
» நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum