தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தில் வழிமுறைகள்

Go down

திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தில் வழிமுறைகள் Empty திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தில் வழிமுறைகள்

Post  meenu Fri Mar 22, 2013 4:30 pm

திருத்திய நெல் சாகுபடியில் உரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என்று சங்ககிரி வேளாண் உதவி இயக்குநர் என்.மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

நடவு வயலை துல்லியமாக சமன் செய்து, தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்த வேண்டும்.
14 நாள்கள் ஆன நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
3 கிலோ விதைகளைக் கொண்டு ஒரு ஏக்கரில் நடவு செய்யலாம்.
ஒரு ஏக்கர் நடவு செய்ய 40 ச.மீ. நாற்றங்கால் தேவை.
நாற்றங்காலின் மீது பாலித்தீன் விரிப்புகளை பரப்பி மரச்சட்டங்களை வைத்து மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும்.
அதில் மண் மற்றும் தொழு உரத்தினை நிரப்பி விதைக்க வேண்டும்.
25 செ.மீ. இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
வயலில் நீர் மறைய நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
2.5 செ.மீ.க்கு அதிகமாக நீரை வயலில் நிறுத்தக் கூடாது.
நடவு செய்த 10-ம் நாள் முதல் 10 நாள்களுக்கு கோனோவீடர் கருவி மூலம் களையெடுக்க வேண்டும்.
இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி தேவையான தழைச்சத்தினை மேல் உரமாக இட வேண்டும்.
உயர் விளைச்சல் நெல் ரகங்கள் மற்றும் வெள்ளை பொன்னி ஆகியவற்றை வேளாண் விரிவாக்க மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum