தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:மட்டன் சமோஸா

Go down

சமையல்:மட்டன் சமோஸா Empty சமையல்:மட்டன் சமோஸா

Post  ishwarya Fri Mar 22, 2013 11:53 am


தேவையானவை :

மைதா - 350 கிராம்
பேக்கிங் பௌடர் - 1/2 தேக்கரண்டி
கொத்துக்கறி - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 1
மல்லித்தழை - 1/2 கப்
புதினா இலை - 1/4 கப்
இஞ்சி - 1 அங்குலம்
பச்சை மிளகாய் - 4
உப்புத் தூள் - தேவையான அளவு
நெய் - 2 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
தக்காளி - 1 பெரியது
கரம் மசாலா - 1 தேக்கரண்டி

செய்முறை:

350 கிராம் மைதா மாவில் 1/2 தேக்கரண்டி பேக்கிங் பௌடரைக் கலந்து கொள்ளவும். 250 கிராம் கொத்துக்கறியை வாணலியில் போட்டு, தண்ணீர் இல்லாமல் வதக்கிக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயம், 1/2 கப் அளவு மல்லித்தழை, 1/4 கப் புதினா இலை, 1 அங்குலம் இஞ்சி, 4 பச்சை மிளகாய் ஆகியவற்றை மிகவும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். மைதா, பேக்கிங் பௌடரைச் சலித்த பின் தேவையான உப்புத் தூள், 2 தேக்கரண்டி நெய், 1 தேக்கரண்டி தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். 1/2 மணி நேரம் கழிந்த பின்னர் மறுபடியும் பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். ஒரு பெரிய தக்காளியை 1/2 கப் தண்ணீரில் வேக வைத்து தோல் நீக்கி, இத்துடன் கரம் மசாலா 1 தேக்கரண்டி, மல்லித்தழை, புதினா இலையைக் கலந்து இறக்கிக் கொள்ளவும்.

கொத்துக்கறியுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, தேவையான அளவு உப்புத்தூள் மற்றும் தக்காளிக் கலவையையும் கலந்து கொள்ளவும். மாவு உருண்டைகளைப் பூரிப் பலகையில் வட்டங்களாகத் தேய்த்து ஒவ்வொரு வட்டத்தையும் 1/2 வட்டமாக செய்து அதை கோன் (cone) வடிவமாக அமைத்து, இதனுள் கொத்துக்கறி கலவையை வைத்து மூடவும். 1/2 மணி நேரம் அப்படியே வைக்கவும். அதன்பின் வாணலியில் 2 கப் சமையல் எண்ணெய் ஊற்றி காய வைத்தக் கோன்களைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சட்னியுடன் பரிமாறலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum