சமையல்:விதவிதமான பரோட்டா!
Page 1 of 1
சமையல்:விதவிதமான பரோட்டா!
கலர் பரோட்டா :
காரட், பீட்ரூட் இரண்டையும் துருவி மொத்தம் 2 கப் எடுத்துக் கொள்ளவும். இத்துடன் சிட்டிகை எலுமிச்சைச் சாறு, மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்துப் பிசிறி வைக்கவும். சிறிது நேரம் சென்று துருவிய காயை நன்கு பிழிந்து காயை மட்டும் எடுத்துக் கொண்டு மாவுடன் சேர்த்துப் பிசைந்து பரோட்டா செய்யவும். நல்ல கலர் கிடைக்கும்.
முருங்கைக்காய் பரோட்டா :
முருங்கைக் காய் பத்து எடுத்து வேக வைத்து, நடுவிலுள்ள சதையை மட்டும் எடுத்துக் கொண்டு, ஒரு கப் பொடியாக நறுக்கிய தக்காளியுடன் சேர்த்து எண்ணெயில் வதக்கவும். இதை மாவுடன் பிசைந்து பரோட்டா செய்யவும்.
சீஸ் பரோட்டா :
சீஸை நன்கு துருவி ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். இரண்டு ஸ்பூன் மிளகுப் பொடி, உப்பு சேர்த்து நன்கு மாவுடன் பிசையவும். இதை பரோட்டா செய்யவும்.
கட்டா பரோட்டா :
புளித்த தயிர் அரை கப், பச்சை மிளகாய் விழுது இரண்டு ஸ்பூன், இஞ்சிச்சாறு கால் கப், இவற்றை ஒன்றாகக் கலந்து மாவுடன் சேர்த்துப் பிசைந்து பரோட்டா செய்யவும்.
கீரை பரோட்டா :
பொடியாக அரிந்த கீரையுடன் (பாலக்கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை எதுவானாலும்) இஞ்சி, பச்சை மிளகாய் விழுது இரண்டு ஸ்பூன், சிறிது பொடித்த ஓமம், உப்பு சேர்த்து மாவுடன் பிசையவும். பிறகு பரோட்டா செய்யவும்.
தால் பரோட்டா :
குழைய வேக வைத்து கடைந்த துவரம் பருப்பு ஒரு கப், கடலை மாவு இரண்டு மேஜை கரண்டி, தனியா, சீரகம் வறுத்து அரைத்த பொடி சிட்டிகை, மிளகாய்ப் பொடி, உப்பு எல்லாம் கலந்து மைதா மாவுடன் சேர்த்துப் பிசைந்து பரோட்டா செய்யவும்.
மூலி பரோட்டா :
முள்ளங்கியை அலம்பி நன்கு துருவி, பச்சை மிளகாய்அரைத்த விழுது ஒரு ஸ்பூன், இஞ்சிச்சாறு ஒரு ஸ்பூனுடன் சேர்த்து உப்பு கலந்து பிசிறி வைக்கவும். இதை மாவுடன் கலந்து பிசைந்து பரோட்டா செய்யவும். இதே போல் வெள்ளரிக்காயிலும் செய்யலாம்.
பழ பரோட்டா :
வாழைப்பழம், பலா, கொய்யா, ஆப்பிள், செர்ரி மற்றும் டூட்டி ப்ரூட்டி என்று எந்த வகைப் பழமானாலும் மசித்து மாவில் கலந்து பிசைந்து வட்டமாக பரோட்டா செய்யலாம்.
ஆனியன் பரோட்டா :
கால்கிலோ சின்ன வெங்காயத்தையும், மூன்று பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி, நெய்விட்டு நன்கு வதக்கவும். கலவையில் இரண்டு டீஸ்பூன் தக்காளிச் சாறு கலந்து நன்கு வதக்கவும். சப்பாத்திகள் இட்டு, இந்தக் கலவையை உள்ளே வைத்து மூடி சுடவும். இதற்கு ஏற்ற சைட்டிஷ் தக்காளி சாஸ்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விதவிதமான மீன் சமையல்
» விதவிதமான திருநெல்வேலி சமையல்
» விதவிதமான முட்டைச் சமையல்
» சமையல்:முட்டை சீஸ் பரோட்டா
» சமையல்:சர்க்கரை வள்ளிக்கிழங்கு - பீட்ரூட் பரோட்டா
» விதவிதமான திருநெல்வேலி சமையல்
» விதவிதமான முட்டைச் சமையல்
» சமையல்:முட்டை சீஸ் பரோட்டா
» சமையல்:சர்க்கரை வள்ளிக்கிழங்கு - பீட்ரூட் பரோட்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum