தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொலுசு கேட்ட மலை வளர் காதலி

Go down

கொலுசு கேட்ட மலை வளர் காதலி Empty கொலுசு கேட்ட மலை வளர் காதலி

Post  amma Fri Jan 11, 2013 12:45 pm


கொலுசு கேட்ட மலை வளர் காதலி

ராமேஸ்வரம், மதுரை, திருவானைக்கா, மயிலாப்பூர் முதலியன வலமாக கொண்டதும், தவம் செய்த இடங்களுமாகையால் அங்கெல்லாம் தாயார் சிறப்பு ஓங்கியிருக்கிறது. ராமேஸ்வரத்தில் மலைவளர் காதலி வலமாக இருக்கவும் விசாலாட்சி இடமாக இருக்கவும் இரண்டு லிங்கக் கோவிலாகையால் இங்கு தாயார் மிகவும் போற்றுதலுக்கு உரியவராவார்.

ஒருதடவை பாஸ்கர சேதுபதி தம் மகளுக்கு வைரக் கொலுசு அணிந்து ராமேசுவரம் கோவிலுக்கு அழைத்து வந்திருக்கிறார். அன்று கனவில் மலைவளர் காதலி சேதுபதியிடம் உன் மகளுக்கு மட்டும் தானோ? என்று கேட்டிருக்கிறாள். தாம் கடவுளுக்கும் வைரக்கொலுசு பூண விரும்பியதே கனவாகிவிட்டதோ என்று முதலில் நினைத்திருக்கிறார்.

ஆனால் காலையில் மகள் தடுக்கி விழுந்தாள் என்பதை கண்டதும், கனவில் தானே வந்து மலைவளர்காதலி யம்மையே உரைத்தது தான் என்று உணர்ந்தார். வேறு கொலுசு செய்யவும் விரும்பாமல் மகளின் கொலுசையே மலைவளர் காதலிக்கு காணிக்கையாக்கி விட்டர். செல்வம் அருளுவதும் இந்த செல்வியே, அவளே அருளியதை ஆசைப்பட்டு கேட்பதும் இந்த அருள் அழகியே, பேசும் தெய்வமான இவள் ஆசைப்பட்டதை கேட்டு தன் பரிவு காட்டுவது வழக்கம் போலும்.

அதனால் வட இந்தியர்கள் தவறாமல் இந்த தாய்க்கு சேலைகள் வாங்கி திருக்கோவில் ஊழியர்க்கு பரிசாக அளிக்க பெறும். தமக்கு தொண்டு செய்வார்க்கு வழங்க தானே விரும்பிக் கேட்கும் தயாநிதி இவள். தேவகோட்டை ஜமீன்தாராகிய ஏ.எல்.ஏ.ஆர். செட்டியார் குடும்பத்தார் 1902 முதல் 1925 முடிய செய்த திருப்பணியில் இத்தாயின் நெஞ்சு குளிர செய்து விட்டார்கள்.

சொர்ண பந்தனம் செய்த பத்ம பீடம், கிரீடம், கர்ண பத்திரம், நீலோற்பல ஹஸ்தம் இவையெல்லாம் மணி கொண்டு இழைத்து செய்தனர். அடி முதல் கழுத்து வரை முழுதுமே தங்கக்கவசம் செய்தனர். அக்குடும்பத்தார் இக்கோவிலில் செய்த திருப்பணிகள் சேதுபதிகளையே கண்ணீர் வரச்செய்து விட்ட பணிகளாகும்.

சர்வ மங்களமும் தருவது ஸ்ரீ சக்கரம் ஆகும். இதனை பெற்ற கோவில்கள் அருள் மழை பொழிவதை காணலாம். அப்படி இவ்வம்மையின் பீடத்தருகே சொர்ண மயமாய் இருக்கும் ஸ்ரீ சக்கரத்தையே நினைத்து வழிபடுவது சகல பாக்கியங்களையும் பக்தர்களுக்கு தருவதாகும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum