வெட்டிவேர் மகிமைகள்
Page 1 of 1
வெட்டிவேர் மகிமைகள்
விலாவேர், இலமிச்சம் வேர் என்ற பெயர்களால் குறிப்பிடப்படும் வெட்டிவேர் எல்லா விவசாயிகளுக்கும் நன்மை செய்யும் ஒரு வெற்றி வேராகத் திகழ்கிறது.
பிரதானமாக இந்த வேர் மண் அரிப்பைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
வெட்டிவேரின் செடிகளை வேருடன் வெட்டி, தோண்டி எடுத்து, ஒரு கொத்தாக உள்ள செடியைத் தனித்தனியே பிரித்தெடுக்க வேண்டும்.
பின் வேர்ப்பகுதியிலிருந்து 15-20 செ.மீ. மேலே உள்ள இலைகளை வெட்டிவிட வேண்டும்.
வேர்ப்பகுதியிலிருந்து 10 செ.மீ. கீழே உள்ள வேர்களை வெட்டி, நடுவதற்கு உள்ள நாற்றுக்களைத் தயாரிக்க வேண்டும். இதனை 15 செ.மீ. இடைவெளியில் நடுதல் அவசியமாகும்.
வெட்டிவேர் புல்லை வெட்டி தாவரங்களைச் சுற்றிலும் போடுவதால் வறட்சியிலிருந்து அவற்றைக் காக்கலாம்.
மேலும் பூச்சிகள், எலிகள், பாம்புகள் ஆகியவற்றை இதன் இலைகளும் வேர்களும் விரட்டிவிடுகின்றன.
நெல்வயல்களில் வெட்டிவேரை நடலாம். இதனால் வயலில் அமைக்கப் பட்ட கரைகள் உறுதிப்படும்.
ஏலத் தோட்டப் பகுதிகளில் வெட்டிவேரைப் பயன்படுத்தினால், நிலச்சரிவு ஏற்படாது. இடுகரை விழாது.
வெட்டிவேர் நட்டதும், அந்தப்பூமி உறுதிப்பட்டுவிடும். கல்சுவர்களின் ஊடே இது செழிப்பாக வளர்ந்துசெல்லும்.
இதன் வேரில் உள்ள எண்ணெய்த்தன்மை எலிகளை அண்டவிடாது.
இது பயிரையோ, அதன் விளைச்சலையோ எவ்விதத்திலும் பாதிக் காது.
ஒவ்வொரு ஆண்டும் வெட்டிவேரைத் தரைமட்ட அளவிற்கு வெட்டிவிட்டு, உரிய பயிருக்கு வெட்டிவேர் கூடுதல் நிழல் தராமல் தடுக்கலாம்.
இதன் உறுதியான சிம்பு வேர்கள் பூமிக்குள் 3 மீட்டர் ஆழம் வரை அடர்ந்து படர்ந்து, மண் சரிவு, உடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
மற்ற விவசாயப் பயிர்களின் இயல்பான வளர்ச்சியில் இது போட்டியிடுவதில்லை.அவற்றின் வளர்ச்சியில் பெரிதும் துணைபுரிகின்றது.
இத்தகயை வெட்டிவேர் எல்லா வகையான மண்ணிலும் பல வகையான கால நிலையிலும் வளமுடன் வளரும்.
இதனைச் சுற்றியுள்ள மற்ற பயிர்கள் ஒரு வேளை அழிய நேர்ந்தாலும் வெட்டிவேர் அழிவதில்லை.
அடுத்துவரும் மழையிலிருந்து மண்ணைக் காக்க, மண்ணிற்குள் மறைந்திருக்கும்.
(தகவல்: ஸ்பைசஸ் இந்தியா, கொச்சி. மூலம்: எஸ்.பழனிச்சாமி)
-எஸ்.நாகரத்தினம், விருதுநகர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெட்டிவேர் நாற்றுகள்
» வெட்டிவேர் சாகுபடி
» முகப்பருவை போக்கும் வெட்டிவேர் சிகிச்சை
» concat eutamilar.com facebook luinofm முகப்பருவை போக்கும் வெட்டிவேர் சிகிச்சை.
» பலா மரத்தின் மகிமைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum