மஞ்சள் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாடு
Page 1 of 1

மஞ்சள் பயிரை 25 வகையான பூச்சிகள் தாக்கி சேதப்படுத்துகின்றன. இதில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாடு பற்றி பார்ப்போம்.
கிழங்கு செதில் பூச்சி:
இது மஞ்சளைத் தாக்கும் முக்கியமான பூச்சியாகும். மஞ்சள் பயிரை வயல்களிலும் சேமிப்பு கிடங்குகளிலும் தாக்குகிறது.
பயிரின் கிழங்குகளின் மேல் கூட்டம் கூட்டமாக இருந்து சாறை உறிஞ்சி செடிகள் வாடி காய்ந்துவிட ஏதுவாகிறது.
சேமிப்பு கிழங்குகளைத் தாக்கும்போது கிழங்கின் எடை குறைந்து முளைப்புத்திறன் பாதிக்கப்படுகிறது.
கட்டுப்படுத்தும் முறைகள்:
பூச்சி தாக்கிய இலைகள், தண்டுகள் முதலியவற்றை சேகரித்து அழித்துவிட வேண்டும்.
பூச்சி தாக்காத நல்ல விதை கிழங்குகளை தேர்வுசெய்து சேகரிக்க வேண்டும். டைகுளோர்வாஸ் 2 மிலி அல்லது மானோகுரோட்டோபாஸ் 15 மிலி/லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து அந்த கலவையில் விதைக்கிழங்குகளை நனைத்து நிழலில் உலர்த்தி பின்னர் நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.
நன்கு மக்கிய 10 டன் ஆட்டு தொழு உரத்தை இரண்டாகப் பிரித்து பாதியை உழவு செய்யும்போதும் மீதியை மண் அணைக்கும்போதும் ஒரு எக்டரில் இடவேண்டும்.
இதனைத் தொடர்ந்து டை மீத்தோயேட் மருந்தை 2 மிலி/லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
விதைக்கிழங்கை குயினால்பாஸ் 2 மிலி/லிட்டர் கரைசலில் அறுவடை செய்தவுடனும், நடுவதற்கு முன் 5 நிமிடமும் நனையவைத்தும் இப்பூச்சி தாக்குதலைக் குறைக்கலாம்.
கண்ணாடி இறக்கைப்பூச்சி:
தாக்கிய இலைகளில் மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றி இலைகள் முதலில் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறி காய்ந்துவிடும்.
மஞ்சள் கலந்த நிறத்துடன் கண்ணாடி இறக்கையுடன் உள்ள இப்பூச்சிகள் இலையின் அடிப்பகுதியில் கூட்டம் கூட்டமாக இருந்துகொண்டு சாறை உறிஞ்சி சேதப்படுத்துகிறது. இதனால் இலைகள் காய்ந்துவிடும்.
இப்பூச்சியைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை பூச்சிகளுடன் சேகரித்து அழிக்க வேண்டும்.
டைமீத்தோயேட் அல்லது மீதைல் டெமட்டான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மிலி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
இலைப்பேன்:
வெளிர் மஞ்சள் நிறத்தில் குஞ்சுகளும், பழுப்பு நிறத்தில் வளர்ந்த பூச்சிகளும் இலையின் மேல் கூட்டம் கூட்டமாக இருந்துகொண்டு சாறை உறிஞ்சும்.
இதனால் இலைகள் சுருண்டு வெளிறிய பச்சை நிறத்தில் காணப்படும். தாக்குதல் அதிகரிக்கும்போது இலைகள் காய்ந்துவிடும்.
இலைப்பேன் வெளிர்மஞ்சள் நிறத்துடன் சீப்புபோல் பிளவுபட்ட இறக்கைகளுடன் காணப்படும்.
தாய் பூச்சியானது இலைகளில் ஒரு வெட்டுப்பகுதியை உண்டாக்கி அதனுள் முட்டை இடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
பாதிக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்க வேண்டும். டைமீத்தோயேட் 2 மிலி அல்லது பாசலோன் 2 மிலி மருந்துக்கு 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
தகவல்: கு.கோவிந்தன், வேளாண் பூச்சியியல் துறை, சா.ராஜதுரை மற்றும் தொண்டைமான், தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கத்தரி பயிரில் பூச்சி கட்டுப்பாடு
» நெல் பயிரில் புகையான் பூச்சி கட்டுப்பாடு
» மஞ்சள் பயிரில் அதிக மகசூல் தொழிற்நுட்பங்கள்
» மஞ்சள் பயிரில் நுண்சத்துக் குறைபாடு
» மஞ்சள் பயிரில் நவீன தொழில்நுட்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum